இந்த நாட்டின் முன்னணி வர்த்தகர்களில் தம்மிக்க பெரேராவும் ஒருவர் , அத்தோடு புத்தாக்க ரீதியான விடயங்களை கையாண்டு வருபவரும் கூட .
இவர் ஆரம்பித்த ஒரு விடயம் , இன்று பலருக்கும் பயனாகி வருவதோடு , ஊடகங்களிலும் பேசப்பட்டு வருகிறது
இவர் இதனை ஆரம்பம் செய்த பின்னர் , பலருக்கும் இது சிறு விடயமாக தோன்றலாம் , இவ்வளவு தானா என்ற கேள்வியும் வரலாம் .
ஆனால் , இப்படியொன்றை ஆரம்பிப்பதை முதன்முதலில் யோசித்து , முதன் முதலாக அதனை செயலாக்கியும் உள்ளார் .
சிந்தனை புதிது , செயலும் புதிது ...
இனி பலரும் இவ்வாறான ஒன்றை ஆரம்பிக்கலாம் .
அப்படி என்ன செய்தார் ?
உலகில் உள்ள தலை சிறந்த பல்கலைக்கழகங்கள் , கல்வி நிறுவனங்களில் உள்ள இலவச கல்வியை , கற்கும் ஆர்வமுள்ளோருக்கு இணையம் வழியாக அறிமுகம் செய்துள்ளார் , இதுவொரு வழிகாட்டல் .
அமெரிக்காவின் ஹார்வர்ட் கல்வி நிலையம் முதல் பல கல்வி நிலையங்களை இங்கு பார்வையிடலாம் - www.dpuni.org.
அது போல , பாடசாலை மாணவர்களின் கல்வி நிலையை உயர்த்த ஒரு இணையம் , மூன்று மொழிகளில் .
அதிலே கணிதம் முதன்மை வகிக்கிறது .
ஆக, கல்வியை பெறுவதற்கான ஒரு டிஜிட்டல் வழிமுறை இங்கு உருவாக்கப்பட்டுள்ளது .
இதற்காக . இணையத்தளம் இரண்டு ஆரம்பிக்கப்பட்டு , இவைகள் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் வலம் வருகிறது .
கொரோனா தாக்கத்தின் பின்னரே இதற்கான வாய்ப்பு அதிகம் என்பதை உணர்ந்தே , தம்மிக்க பெரேரா முந்தியுள்ளார் .
அதிலே வெற்றியும் கண்டுள்ளார் .
எத்தனையோ சமூக சேவகர்கள் , அரசியல்வாதிகள் , சமூகத்தின் காவலர்கள் , வர்த்தகர்கள் என பலர் இருந்தும் , நமது சமூகத்திலே இவ்வாறான சிந்தனை வரட்சியொன்று ஏற்பட்டுள்ளமை வேதனையே ....
நம்மவர்கள் இனி தான் , வெளி கிளம்புவார்கள் .
இது பலருக்கும் பயனுள்ளவை என்று நினைத்தால் , நீங்களும் இதனை பகிரலாம் .
-Mohamed Infas-
-Mohamed Infas-
0 Comments