Subscribe Us

கல்பிட்டி வரலாற்று சுவடுகள்


கல்பிட்டிக்கு என சில சிறப்பம்சங்கள் வரலாற்று சுவடுகள் உள்ளன. வரலாற்று சுவடுகள் பற்றி தொடர்ந்து எழுதி இருக்கிறேன். இன்னும் சில வற்றை இந்தக் குறிப்பு க்களில் கூற நினைக்கிறேன். புத்தளமும் கல்பிட்டியும் புத்தளம்மாவட்டத்தின் இரு கண்கள். அவற்றி ன் வளர்ச்சி யும் கிராமங்களின் வளர்ச்சி யும் எப்போதும் என் கனவாக இருந்துள்ளது. எனது தாயார் கல்பிட்டியில் பிறந்து வளர்ந்தவர் . அவரது பெற்றோர் களான மு.கா. மு . முகம்மது அலி மரைக்காயர் தம்பதிகள் வாழ்ந்த 200 வரு. பழமையான வீடு இன்று ம் கல்பிட்டி யில் உள்ளது. பண்டைய கல்பிட்டியின் மகத்துவம் பற்றிப் பேசும் போது கண் முன்னே வரும் வரலாற்று பூர்வமான வீடுகளில் ஒன்று. அதற்கு சற்றுத் தொலைவில் வில் தான் புகழ் பெற்ற வரலாற்று ஆசிரியர் கல்பிட்டியின் மூத்த கல்வி மான் சைமன் காசிச் செட்டி வாழ்ந்த அவரது முன்னோர்களின் வீடும் உள்ளது. பின் நாட்களில் கொழும்பில் குடியேறிய ஜஸ்டிஸ் அக்பரின் தந்தையின் வீடும் கல்பிட்டியில்தான் உள்ளது.

இனி வரும்


சுருக்கமான குறிப்புக்கள் இளைய சமுதாயத்திற்கு அறிவூட்டுவதாகவும் இருக்கலாம் .


கல்பிட்டி நினைவுகள் - 1 1940,50 களில் வரலாற்று உணர்வுடன் நாம் செயல்படவில்லை. இருந்த ஒரு சில முக்கியமான தகவல்களை, பொருட்களை, ஆவணங்களை யேனும் பாதுகாப்பதில் நாம் அக்கறை காட்டவில்லை . கல்பிட்டி பாடசாலை யில் வரலாற்று ப்பாடம் இருந்த போதும் அநுராத புரயுகம், சீகிரி காசியப்பன், மஹா பராக்கிரபாகு பற்றி ஐரோப்பிய, உலக சரித்திரத்தினைப்பற்றிப்படித்தோம். ஆனால் 2000ம் ஆண்டுகள்  சரித்திரத்தின் சுவடுகள் கொண்ட கல்பிட்டி பற்றி எதுவும் தெரியாதிருந்தோம். பாடசாலை க்கு அரை மைல் தூரத்தில் நகரின் முக்கிய பகுதியில் இருந்த ஒல்லாந்தக் கோட்டை பற்றி எங்களுக்கு ஒன்று ம் சொல்ல ப்படவில்லை.

அதற்கு அருகில் இருந்த ஆயிரம் வருடங்கள் பழமையான இறங்கு துறை ( ஜெட்டி) பற்றி, 10 மைல் தொலைவில் இருந்த 1500 ஆண்டுகள் பழமையான மிகச் சிறந்ததென வெள்ளைக்காரனும் வியந்த இயற்கை துறைமுகம் பற்றி, எவ்வித உரையாடலும் நடைபெறவில்லை.


சமூகத்தின் குறைபாடுகள் ஒரு புறம். கல்வித் திட்டத்தில் இருந்த குறைபாடுகள் ஒரு புறம். அக்காலத்தில் கல்வி கற்ற வர் களின் மெளனம் இன்னொரு புறத்தில் என்று இப்பிரச்சி னையைப் பார்க்கலாம். கல்பிட்டிக்கு மட்டுமல்ல, இது ஒரு பொது ப் பிரச்சினை. 1900- 1970 களுக்கு இடைப்பட்ட வர்களின் மறைவோடு கல்பிட்டியின் சரித்திரம் அறிந்தவர்களை க் கல்பிட்டி இழக்கின்றது.

வெள்ளைக்காரன் குடா. அதற்கு அப்பால் போர்த்துக்கீசியர் குடா அதற்கு மேல் கீரிமுந்தல் இயற்கை துறைமுகம். மீனவர் களும் பொது மக்களில் சிலரும் இவற்றை அறிவார் கள் , இப்பிரதேச கல்வி, சரித்திரம், படித்த வர்களடையே இவற்றை அறிந்து கொள்ளும் ஆர்வம், வரலாறு கற்பித்தலில் உள்ளூர் செய்திகள் எதுவுமே இல்லை என்பது தான் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய து.

-Professor Anes-

Post a Comment

0 Comments