உலக பணக்காரர் பில்கேட்ஸின் மகள் ஜெனிபர் கேதரின் கேட்ஸ் ஒரு முஸ்லிம் இளைஞரை காதலிப்பதாகவும் அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் ஜெனிபர் கேதரின் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.
மைக்ரோசொப்ட் நிறுவன உரிமையாளர் மற்றும் உலகின் இரண்டாவது செல்வந்தரான பில்கேட்ஸின் 21 வயதான மகள் ஸ்டெபர்ட் பல்கலைக்கழகத்தில் கல்விக்கற்று வருகின்றார்.
அவர் அதே பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் 26 வயதான நயல் நாசர் என்ற முஸ்லிம் இளைஞரை காதலித்து வருகின்றார்.
எகிப்தைச் சேர்ந்த நாசர் பெரும் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர் இல்லை எனினும் அவர் தனது சொந்த முயற்சியால் முன்னிலை அடைந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எகிப்த்தைச் சேர்ந்த நாசரின் பெற்றோர்கள் தற்போது குவைத்தில் தொழில்புரிந்து வருவதாகவும், நாசர் 2013 ஆம் ஆண்டு ஸடெபர்ட் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பதற்காக அமெரிக்காவிற்கு வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் நாசர் மற்றும் ஜெனிபர் கெதரின் காதலித்தது வருகின்றதையும் அவர்கள் விரைவில் திருமண பந்தத்தில் இணையவிருப்பதனையும் இவர்கள் இருவரும் தமது புகைப்படப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி நிரூபித்துள்ளனர் என்றே கூறவேண்டும்.
0 Comments