Subscribe Us

நீதிமன்ற கட்டளையை மீறி சடலம் ஒன்றை புதைத்தமை தொடர்பில் பாலித தெவரப்பெரும கைது


ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர், பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும உள்ளிட்ட 6 பேர் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நீதிமன்ற கட்டளையை மீறி சடலம் ஒன்றை புதைத்தமை தொடர்பில் இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பாலித தெவரப்பெரும உள்ளிட்ட 6 பிரதிவாதிகளும் இன்று முற்பகல் நீதிமன்றத்தில் ஆஜராகியதை அடுத்து, மத்துகம நீதவான் N.H.H. ஹல்பந்தெனிய விளக்கமறியல் உத்தரவை பிறப்பித்தார்.

தெபுவன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ட்ரொய்ட் தோட்டத்தில் உயிரிழந்த ஒருவரின் சடலத்தை தோட்ட மயானத்தில் நல்லடக்கம் செய்வதற்கு நீதிமன்றத்தால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அந்த உத்தரவை மீறி பிரதி அமைச்சர் உள்ளிட்ட 6 பேரும் சடலத்தை புதைத்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments