Subscribe Us

இளவரசருக்கு கை கொடுக்க மறுத்த முஸ்லிம் பெண்கள்! படிப்பினை பெற்ற இளவசரர்!


அண்மையில் துப்பாக்கி சூடு நடந்த நோர்வே மசூதிக்கு அந்நாட்டு இளவரசரும் எதிர்கால மன்னருமாகிய #ஹாகோன் விஜயம் செய்திருந்தார்.
இதன்போது மசூதிக்கு வருகை தந்தவர்களுடன் அவர் கைலாகு செய்தார்.
ஆனால் ஒரு முஸ்லிம் பெண் கை கொடுக்க மறுத்து ஒரு மரியாதையின் நிமித்தம் தன் கையை நெஞ்சோடு வைத்து சைகை செய்தார்.
இதனை தொடர்ந்து ஏனைய முஸ்லிம் பெண்களும் அவ்வாறே செய்தனர், இதனை அவதானித்த இளவரசர் ஹாகோன் உடனடியாக தன்னை சுதாகரித்து கொண்டு தானும் தனது கையை நெஞ்சின் மேல் வைத்து அவர்களுக்கு மரியாதை செய்தார்.
குறித்த பெண்களின் இந்த செயல் அந்நாட்டு ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்டது.
கண்டநிண்டவர்களோடு கைகொடுத்து செல்பி அடித்து பெருமையாக ஸ்டேட்டஸ் போடும் பெண்களுக்கு மத்தியில் மிக சொற்பளவில் முஸ்லிம்கள் வாழும் நோர்வே நாட்டு முஸ்லிம் பெண்களின் இந்த முன்மாதிரியான செயலை பாராட்டுவதில் தவறேதுமில்லை.

Post a Comment

0 Comments