Subscribe Us

header ads

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாப ராஜபக்ஸவுக்கு உண்மையான தமிழராக இருந்தால், வாக்களிக்க மாட்டார்கள் - CVV


ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாப ராஜபக்ஸவுக்கு உண்மையான தமிழராக இருந்தால், வாக்களிக்க மாட்டார்கள் என வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியுமான சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
இன்னும் அவருக்கு எதிராக இரண்டு மூன்று வழக்குகள் காணப்படுகின்றன. கோட்டாபய ராஜபக்ஸ இது சிங்கள பௌத்த நாடு என்று கூறும் ஒருவர். இதனை நிறைவேற்றிக் கொள்வதற்கு அவர் எந்தவொரு வன்முறையையும் மேற்கொள்வார்.
அதேபோன்று, கோட்டாபய ராஜபக்ஸ ஜனநாயக ரீதியில் சிந்திக்கும் ஒருவர் அல்லர். இப்படியான ஒருவரை மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதி வேட்பாளராக ஏன் தெரிவு செய்தார் என்பத புரியாத புதிராகவே உள்ளது எனவும் சி.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதியானால், இந்த நாட்டிலுள்ள தமிழ் மக்களுக்கு இருண்ட யுகம் ஒன்று உருவாகும். இதனால், அவருக்கு வாக்களிக்குமாறு கூறமாட்டேன். எந்த இடத்திலும் கூறியும் இல்லை. இதுதான் எனது நிலைப்பாடு ஆகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாக இன்றைய சகோதர தேசிய ஊடகமொன்று அறிவித்துள்ளது.   (மு)

Post a Comment

0 Comments