Subscribe Us

நாட்டில் அரசியல் புரட்சியொன்றை ஏற்படுத்தப் போவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு


நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான கொள்கைகள் உள்ளடக்கிய பலமான, அதிகாரம் உள்ள அரசியல் கூட்டணியொன்றை அமைத்து நாட்டில் அரசியல் புரட்சியொன்றை ஏற்படுத்தப் போவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (24) அக்கும்புர வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்ததன் பின்னர், பஸ் தரிப்பு நிலையமொன்றையும் திறந்து வைத்து பொது மக்கள் மத்தியில் உரையாற்றுகையில் பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.
கூட்டணியின் கொள்கை வெளியீடு, வேட்பாளர் பெயர் அறிவிப்பு என்பன ஒரே தினத்தில் இடம்பெறும். கூட்டணியுடன் ஒன்றிணையும் சகல கட்சிகளினதும் தனித்துவங்களைப் பாதுகாத்து அக்கட்சியுடன் கைகோர்க்கவுள்ளதாகவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments