Subscribe Us

header ads

முழு நாட்டையும் உண்ணாவிரதத்துக்காக அணி திரட்டுவோம் ரதன தேரர்...!! (விபரங்கள் உள்ளே)

முடியுமானால் ரிஷாட் பதியுதீனுக்கு அமைச்சு பதவியை கொடுத்து பார்க்கட்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் அரசாங்கத்திற்கு சவால் விட்டுள்ளார்.

இதனை மேற்கோள்காட்டி அரச ஊடகமொன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது.


முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களிலிருந்து அவர் விடுவிக்கப்படுவதாக நாடாளுமன்ற தெரிவுக்குழு குறிப்பிட்டுள்ளது.

முடியுமானால் அவருக்கு அமைச்சு பதவியை கொடுத்து பார்க்கட்டும் என அரசாங்கத்திடம் சவால் விடுகின்றேன்.

அவ்வாறு அமைச்சு பதவி வழங்கப்படுமானால் நாடு முழுவதும் உண்ணாவிரதத்தில் ஈடுபட நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.


ச.தொ.ச வாகனத்தை சட்டவிரோதமாக பயங்கரவாத செயல்களுக்கு வழங்கினார் என்பது உள்ளிட்ட பல குற்றச்சாட்டின் பேரில் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக பொலிஸ் திணைக்களத்தில் நான் பல முறைப்பாடுகளை முன்வைத்துள்ளேன்.

அவ்வாறான முறைப்பாடுகளை 30 நாட்களுக்குள் பரிசீலனை செய்து முடிக்க இயலாது. அதனால் தான் நாடாளுமன்ற தெரிவுக்குழு அவரை குற்றங்களில் இருந்து விடுவிப்பதாக குறிப்பிட்டுள்ளது.


ரிஷாட் பதியுதீனுக்கு மீண்டும் அமைச்சு பதவி வழங்கப்பட்டால் அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரரேரணையை புதுப்பித்து நாடாளுமன்றில் சமர்ப்பிப்போம். அதே நேரம் அவருக்கெதிராக முழு நாட்டையும் உண்ணாவிரதத்துக்காக அணி திரட்டுவோம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

0 Comments