Subscribe Us

header ads

அனைத்து பிரதான சமயங்கள் பற்றிய தகவல்கள் - விபரங்கள் மற்றும் ஓரளவு வரலாறும் கற்பிக்கப்பட வேண்டும்


ஐக்கிய இராச்சியத்தில், 'பொது' பாடசாலைகளில் சமயக் கல்வியில் (Religious education) குறித்த ஒரு சமயத்தினை மாத்திரம் கற்பிக்காது, அனைத்து பிரதான சமயங்கள் பற்றிய தகவல்கள் - விபரங்கள் மற்றும் ஓரளவு வரலாறும் கற்பிக்கப்படுகிறது.
நானறிந்த சில பாடசாலைகளில் முஸ்லிம் இளைஞர்களும் இவ்வாறு R.E ஆசிரியர்களாக இருக்கிறார்கள்.
இலங்கையில் இவ்வாறான ஒரு முறைமை அவசியப்படுவது பற்றி 2015 மார்ச் மாதம் தற்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன லண்டன் வந்திருந்த நேரம் அவரோடு பேசியிருந்தோம். 2018ல் வந்த போது வினவினால்... இதை செய்யப்போனால் என்ன நடக்கும் என்று தெரிகிறது தானே? என்று அவரே பதில் கேள்வியெழுப்பியிருந்தார்.
மதங்களுக்கிடையிலான வெறுப்புணர்வை தணிக்க அதுவும் உதவலாம் என்கிற நப்பாசை!
இன்று சம்மாந்துறை தாறுல் உலூம் வித்தியாலய குழந்தைகளுக்கு ஏனைய மதங்கள் சார்ந்தோரின் பண்டிகைகள் தொடர்பிலும் விளக்கப் பாடம் எடுக்கப்பட்டதாக செய்தி.. 

-Irfan Iqbal-

Post a Comment

0 Comments