Subscribe Us

header ads

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பிற்கு தலைவலி ஏற்படுத்தி வரும் இல்ஹான் ஓமரின் துணிச்சல்...!!


சர்வதேச நாடுகளின் உள்நாட்டு பிரச்சினைகளில் தலையிட்டு போர் அபாயத்தை தூண்டி வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு இளம் பாராளுமன்ற உறுப்பினரை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறார்.
ஆப்ரிக்க கறுப்பின குடியேற்ற பிரிவை சேர்ந்த இல்ஹான் ஓமர் எனும் இளம்பெண் அமெரிக்க மின்னசோட்டா மாகாண உறுப்பினராக ஹிஜாப் அணிந்து வெள்ளை மாளிகையில் தனக்கு எதிராக அமர்ந்த நாள் முதல் இல்ஹான் மீது டிரம்ப் வெறுப்பை உமிழ்ந்து வருகிறார்.
கறுப்பினத்தவர்கள், அகதிகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் சார்ந்த பிரச்சினைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த இல்ஹான் ஓமரின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் வருகிற 2020 ம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க தேர்தலில் மீண்டும் வேட்பாளராக இல்ஹான் ஓமர் நிறுத்தப்படவுள்ளார்.
அவர் பிரச்சாரம் செய்ய செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருவதை பார்த்து ஆவேசப்பட்ட டிரம்ப் இல்ஹானை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று உளறி வருகிறார்.
அமெரிக்க செனட் தேர்தலில் போட்டியிடும் தனது நிலையில் துணிச்சலுடன் உறுதியாக உள்ள இல்ஹான் ஓமருக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருவது டிரம்பின் தூக்கத்தை தொலைத்து புலம்ப வைத்துள்ளது.

Post a Comment

0 Comments