Subscribe Us

இனவாத அரச அதிகாரிகளே - கத்தார் நாட்டில் இயக்கப்படும் மெட்ரோ ரயிலுக்கான பயணச் சீட்டில் சிங்கள மொழியும் இடம் பெற்றுள்ளதை அறிவீரா?

கத்தார் நாட்டில் இயக்கப்படும் மெட்ரோ ரயிலுக்கான பயணச் சீட்டில் சிங்கள மொழியும் இடம் பெற்றுள்ளது. அந்நாட்டு மொழியுடன் சிங்களமொழியும் இடம் பெற்றுள்ள பயணச் சீட்டுக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

இலங்கையில் அரபு மொழியை முஸ்லிம்கள் தங்களது பகுதிகளில் தமது சொந்த தேவைக்காக பயன்படுத்தியமைக்கு ஆர்ப்பாட்டங்களும் விசாரணைகளும் இடம்பெற்றுவரும் நிலையில் 100% அரபு மொழி பேசுபவர்களை தேசிய இனமாக கொண்ட QATAR நாட்டில் அந்நிய மொழிகளுக்கு, அதுவும் சிங்களமொழிக்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தை பார்த்து இனவாதம், மொழிவாதம் பேசும் சிலர் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.


Post a Comment

0 Comments