Subscribe Us

header ads

மட்டக்குழி பஸ் நிலையத்தில் 1800 வீடுகள் என ஒரு வீடு 15இலட்சத்து 50ஆயிரம் எனச் சொல்லி ஏழை எளிய மக்களின் 400 கோடி அபேஷ் (அவதானம்)



பொரளையில்உள்ள ,இக் கம்பனி மட்டக்குழி பஸ் நிலையத்தில் 1800 வீடுகள் என ஒரு வீடு 15இலட்சத்து 50ஆயிரம் எனச் சொல்லி ஏழை எளிய மக்களின் 400 கோடி ருபாவை அதன் உரிமையாளா் துமிந்த எனும் நபா் ஏப்பமிட்டுள்ளாா். 

அவா் மேலும் வத்தளை அக்பா் டவுனில் 10 இலட்சம் ஒரு தொடா் மாடி வீடு கொரணையிலும் தொடா் மாடி வீடு என ஊடகங்களில் விளம்பரப்படுத்தியுள்ளாா். 

அத்துடன் குறிப்பிட்ட காணியில் ஒரு காணியில் விளம்பரப்பலகையிடப்பட்டு பைலிங் வேலை ஆரம்பித்துள்ளதாகவும் அதனைப் பாா்வையிட்டதாகவும் 10 தவணை முறையில் இப் பணத்தினை இக் கம்பணிக்குச் சென்று செலுத்தி ரீசிட் ஒப்பந்தமும் ்கைச்சாத்திட்டதாகச் பொதுமக்கள் அறிவிக்கின்றனா். 

இன்று இவ்வகையான பணத்தினை இழந்த மக்கள் கொழும்பு இலங்கை மன்றக் கல்லுாாியில் ஒன்று கூடினாா்கள். இப்பிரச்சினையை ஒரு சட்டத்தரனிகள் மற்றும உள்ளக கணக்காய்வு நிறுவனம் தஜ்தாவேஜூகளையும் சேகரித்தனா் 

குறைந்த விளையில் கொழும்பில் வீடு கிடைப்பதற்காக முன்டியடித்துக் கொண்டு வீடு வாங்கக் கூடாது. வீடு நிர்மாணிப்பதற்கு கொழும்பு மாநகரம் படவரைபு அனுமதி இவைகளை சரி வர கவனத்திற் கொண்ட பின்னரே வீடுகளை முன் பதிவு செய்ய வேண்டும்.

-Ashraff A Samad-








Post a Comment

0 Comments