Subscribe Us

மொஹமட் நிஷோஸின் (பொள்ளாச்சி) கவிதை தொகுப்பு.



அண்ணான்னு அழுதவள
அம்மணம் ஆக்கியவனுக்கு
என்ன ஹெயாருக்கு
இன்னும் விசாரணை.

வீடியோ பண்ணிய
காடையனை மிருகத்த
ஓட விட்டு சுடாம
ஓசியில சாப்பாடு.

நடு ரோட்டில் போட்டு
நாயைப் போல் கொன்றால்தான்
அடுத்தவன் எவனும்
அடாவடி செய்ய மாட்டான்.

இஸ்லாத்தில் சொன்னது போல்
இரண்டு பேரைப் போட்டால்
இஷ்டத்துக்கு ஆடும் பேய்கள்
இல்லாமல் போகும்

மாட்டுக்கறி வெச்சிருந்தா
போட்டுத் தள்ளுபவன்கள்
கூட்டிக் கொடுத்தவனை
கொஞ்சமும் எதிர்க்கல்லையே.

பொல்லாத ஆட்சியிலே
பொதுமக்கள் ஆபத்தில்.
பொள்ளாச்சி காட்சியிலும்
பொலிடிக்கல் புகுந்து இருக்கு

ஆஷிபா விடயத்தில்
ஆனதென்ன தெளிவில்லை
பேசுவார் இதனையும்
பின்னர் மறைத்திடுவார்

Mohamed Nizous

Post a Comment

0 Comments