எமது எகோதரங்களுக்கு
இலகுவாக ஷஹீத் பதவி
எடுத்துக் கொடுத்த உனக்கு
எமது நன்றிகள்
ஊடகத்தின் முகத்தை
உரித்துக் காட்டி
வேடதாரிகளை எமக்கு
வெளிப்படுத்தி'னாய்'- நன்றிகள்
மேற்கின் கலாச்சாரம்
மிருகங்களை உருவாக்குவதை
போட்டுக் காட்டிய உனக்கு
பொதுவான நன்றிகள்
யார் இவர்கள்
ஏன் தொழுதார் என்று
ஆராய அடுத்தவர்க்கு
அளித்த வாய்ப்புக்கு நன்றிகள்
கண்டனம் தெரிவிக்கவும்
கனக்க யோசிக்கும்
புண்ணியவான்கள் பற்றி
புரியவைத்ததற்கும் நன்றிகள்
இலங்கையில் இறையில்லத்தில்
இரக்கமின்றி சுட்டோர்க்கும்
இறைவனின் தண்டனை
இறங்கியது போல
இறங்கும் உனக்கும்
இது கண்டு பலர் மனதில்
ஏற்படுத்தும் மாற்றத்துக்காய்
எமது நன்றி உனக்கு.
இரத்தக் காட்டேறியே
இதற்குரிய பலனை
இறக்கு முன் அனுபவிப்பாய்.
இறைைவா கொடுத்து விடு
Mohamed Nizous
0 Comments