Subscribe Us

பசுமையின் பவளங்கள் புத்தக வெளியீட்டு விழா (படங்கள் இணைப்பு)


கல்பிட்டி அல்-அக்ஸா தேசிய பாடசாலையில் அதிபர் ரோஸ் புஹாரி தலைமையில்  பாடசாலையின் சுற்றாடல் குழுவினரால் "பசுமையின் பவளங்கள்" எனும் நூல் ஒன்று வெளியிடப்பட்டது,
புத்தளம் மாவட்ட சுற்றாடல் குழு ஆலோசகரும் எமது பாடசாலை ஆசிரியருமான ஷாபி அவர்களின் வழிக்காட்டலில் அல்-அக்ஸா தேசிய பாடசாலையில் இயங்கிவரும் சுற்றாடல் குழுவினரால் பசுமையின் பவளங்கள் எனும் புத்தக வெளியீட்டு விழா  பாடசாலை கேட்போர்கூடத்தில் நடைபெற்றிருந்தது.
இந்த நூலில் முன்னைய காலங்களில் பாடசாலை சுற்றாடல் குழுவினால் செய்யப்பட்ட திட்டங்கள் மற்றும் மாணவர்களது விபரங்கள், படங்கள் மேலும் ஜனாதிபதி விருதி பெற்ற மாணவர்கள் சான்றிதழ்கள் பெறும் படங்களும் அடங்யிருந்தது.
விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் நூல் பிரதியொன்றும் வழங்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது..
-irfan-









Post a Comment

0 Comments