Subscribe Us

header ads

60 ஏக்கரை அழித்து..! மினிஸ்டருக்கு ஒரு call நள்ளிரவில் ஒரு SMS

60 ஏக்கரை அழித்து..!
நிரப்பி, மண் இட்டு, மரம் வளர்த்து, பறவை அமர, ஒப்பந்தம் செய்யப்பட்ட 
குழிகளில் குப்பை தட்டி...!

கொழும்பிலிருந்து சேறாக்குழி வரை நாய்கள் போல் 
நஜீஸ் இழுத்து வந்து...!

காட்டுக்கும், கடலுக்கும், காற்றுக்கும்
நஞ்சு வைத்து...!

இனம்புரியா நோய் வளரும் இன்னொரு மண் செய்ய....
இந்த அரசாங்கம் ஒதுக்கும் தொகை...!
7600 மில்லியன்..!!!

Budget - 2019...!
ஒரு அனாதைக் குழந்தையை அடித்துக் கொலை செய்யும் Live... காட்சி..!!

வாருங்கள் வாருங்கள் வாக்காளப் பெருமக்களே...!!
ஓட்டுப்போட்டு ஓட்டுப்போட்டு ரேகை தேய்ந்தவர்களே...!!

உங்கள் தலைவர்கள்..
இந்தக் காசைப்புதைக்க கையுயர்த்தப் போகிறார்கள்..!!? அறுவைக்காட்டுக்கு அனுமதி வழங்கப் போகிறார்கள்...!!?

கழுத்தைப்பிடிக்கும் நேரம் இது...
குடித்த தாய்ப்பால் கொதிக்கும் கோபம் இது...

கட்சி ஆதரவாளர்கள்...
cut-out வைத்தவர்கள்...
பிராந்திய அமைப்பாளர்கள்...
பீரங்கிப் பேய்ச்சாளர்கள்.. 
தலைவரை அழைத்து வந்து மேடையில் நிறுத்தியவர்கள்...

உங்கள், 
விசுவாசத்தை விலை பேசும் வேளை இது..!
தனது பொறுப்புணர்வை போட்டுடைக்கும் தருணம் இது..!!

புத்தளம்...! 
தனது ஒவ்வொரு vote ஐயும் 

திரும்பிக்கேட்கும் யுத்தம் இது...!!
எழுந்து நிற்போம்...!
மினிஸ்டருக்கு ஒரு call.. நாம் ஊமை இல்லை என்று நிரூபிப்போம்...! 

நள்ளிரவில் ஒரு SMS.. நாம் விழித்திருக்கிறோம் எனச் சொல்வோம்...!! தஹஜ்ஜத்தின் கண்ணீர் அந்த காதுகளுக்கு மொழிபெயர்ப்போம்..!!

எதிர்கட்சியோ, தன் கட்சியோ... தடுத்து வாக்களிக்க வேண்டும்...! 

'தலைக்கு'க் கொடுக்கும் அழுத்தத்தில்... இந்த budget வெடிக்க வேண்டும்...!!

"விரல்" மட்டுமல்ல, இந்த சமூகத்திற்கு ஓர் உடலும் இருப்பது உணர்த்தப்பட வேண்டும்..!!!
—-
உயிருடன் 
புத்தளம் மரிக்கார் 
05-03-2019

பின் குறிப்பு :
1. Call எடுப்பவர்கள் தங்கள் பெற்ற Responds ஐ இங்கு பதிவிடுங்கள்.

2. SMS ஐயும் பெற்ற பதிலையும் சொல்லிச் செல்லுங்கள். 

3. MP மாரின் தொலைபேசி இலக்கங்களை உள்ளூர் அமைப்பாளர்/ கட்சித் தொண்டர்களிடம் பெறுங்கள்.

4. முடியுமாயின் இதனை சிங்களத்தில் மொழிபெயர்ப்பு செய்யுங்கள்.

5. இந்த ஆக்கத்தின் வேண்டுகோள், "உங்களுக்கும்" அல்ல..! "உங்களுக்கு.!!"

Post a Comment

0 Comments