Subscribe Us

header ads

பு /எருக்கலம்பிட்டி மு.ம.வி.பாடசாலை முன்று மாடிக் கட்டிடத்திற்கு நிதி ஒதுக்கீடு


வணிக கைதொழில் நீண்ட காலம் இடம்பெயர்ந்துள்ளோர் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் கௌரவ அல் ஹாஜா றிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதிக்கீட்டில் புத்தளம் எருக்கலம்பிட்டி மு.ம.வித்தியாலைய பாடசாலைக்கு மூன்று மாடி கட்டிடம் அமைப்பதற்கான நிதி விடுவிப்பு அனுமதிக் கடிதம் நேற்று கையளிக்கப்பட்டது., புத்தள பிரதேச சபை உறுப்பினர் றிஜாஜ், EPIO உறுப்பினர்கள் மற்றும் எருக்கலம்பிட்டி ACMCயின் முக்கிய போராளிகள் கௌரவ அமைச்சரிடம் இணைந்து விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த மூன்று மாடிக் கட்டித்திற்கான நிதி அமைச்சின் கீழ் இயங்கும் மீள்குடியேற்ற செயலணியால் ஒதுக்கப்பட்டுள்ளது .


மூன்று மாடி கட்டிட நிதி விடுவிப்புக்கான அனுமதி கடிதம் உத்தியோக பூர்வமாக  (2019.02.25) காலை கல்லூரியின் அதிபர் M.ஹூஸைமத் அவர்களிடம் ஓய்வு பெற்ற நிர்வாக உத்தியோகத்தர் நாசர், நஜ்மி ஆசிரியர் மற்றும் சாஹின் றிஷா ஆகியோரினால் கையளிக்கப்பட்டது.

-Hafeel Mohamed-




Post a Comment

0 Comments