மறைந்த அமீரக ஜனாதிபதி ஷேக் ஜாயித் போல் தோற்றமளிக்கும் ஷார்ஜா இமராத்தி இளைஞர்
34 வயதுடைய ஷார்ஜா இமராத்தி இளைஞர் 'ஹஸ்ஸா ஸயீத் அப்துல்லா அல் கித்பி' மறைந்த அமீரக ஜனாதிபதியும், அபுதாபியின் ஆட்சியாளரும், அமீரகத்தின் தந்தை எனவும் போற்றப்படுபவருமான ஷேக் ஜாயித் பின் நஹ்யான் அவர்களின் தோற்றத்தில் காட்சியளிக்கின்றார், இந்த ஒற்றுமை இமராத்திகளையும், அமீரகவாழ் மக்களை பேராச்சிரியப்படுத்தி வருகின்றது.
இமராத்தி என்ற ஒற்றுமையை தவிர மறைந்த ஷேக் ஜாயித் அவர்களுக்கும் ஹஸ்ஸா ஸயீத் அப்துல்லா அல் கித்பி அவர்களுக்கும் எந்த வகையிலும் தொடர்போ, உறவோ கிடையாது என்றாலும் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஷேக் ஜாயித் அவர்கள் போல் தோற்றமளிப்பதாக இன்ஸ்டாகிராம் புகைப்படம் ஒன்றை தான் பதிவேற்றியதை தொடர்ந்து வந்த கமெண்ட்டுகள் வழியாக தெரிய வந்ததாக தெரிவிக்கின்றார்.
ஷேக் ஜாயித் போல் தோற்றமளிப்பதை தான் ஒருபோதும் சம்பாத்தியத்திற்காக பயன்படுத்திக் கொண்டதில்லை என்று கூறும் ஹஸ்ஸா, பல்வேறு அமீரக கலாச்சார விழாக்களுக்கு தோற்றத்தின் காரணமாக சிறப்பு அழைப்பாளராக சென்று வருகின்றார். இதன் மூலம் கிடைக்கும் அறிமுகங்களின் வழியாக அமீரக முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள், அனாதைகள், பள்ளிகன்கூடங்கள் போன்றவைகள் பயன்படச் செய்கின்றார், இத்தனைக்கும் ஹஸ்ஸா அவர்கள் ஷார்ஜா ஆட்சியாளரின் பாதுகாப்பு படை வீரர்களில் ஒருவராகவே பணியாற்றி வருபவர்.
இவர் வாழ்வில் நடந்த நகைச்சுவையான நிகழ்வு ஒன்று:
ஒருமுறை அல் அய்னில் 'அமீரக கொடி நாள்' தின கொண்டாடத்தின் ஒரு பகுதியாக ஒரு இமராத்தி குடும்பத்தினரை சந்திக்க சென்றிருந்தார். குடும்பத்திலுள்ள அனைவரும் இவருடன் அன்புடன் அளவலாவிய நிலையில் ஒரு சிறுமி மட்டும் அருகே வராமல் சிறிது தூரத்தில் சென்று அழத்துவங்கிவிட்டாள். விசாரித்த போது தான் தெரிந்தது, ஷேக் ஜாயித் அவர்கள் இறந்துவிட்டார்கள் என சொல்லித்தரப்பட்டுள்ள நிலையில் நமது வீட்டிற்கு வந்துள்ள ஷேக் ஜாயித் யார்? என பயந்து போய் அழுதுள்ளாள். இறுதியாக அச்சிறுமிக்கு உண்மையை விளக்கிக் கூறியவுடன் பயம் அகன்று அருகே வந்துள்ளாள்.
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்
0 Comments