Subscribe Us

header ads

ஒரு காலத்தில் வறுமைக்கு உதாரணமாக எடுத்துக்கொள்ளப்பட்ட நாடு. இன்று? (எதியோப்பியா!)


ஒரு காலத்தில் வறுமைக்கு உதாரணமாக எடுத்துக்கொள்ளப்பட்ட நாடு. இன்று அதிகவேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்று. ஆபிரிக்காவின் சீனா என்ற புனைப்பெயரால் தற்போது அழைக்கப்படுகிறது.

உட்கட்டமைப்புகளுக்கு மேலதிகமாக மனித அபிவிருத்தி தரப்படுத்தலான (Human Development Index) கல்வி சுகாதாரம் போன்றவற்றிலும் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது.

உங்கள் நாட்டில் ஏர்போட் இருக்கா!? என்று ஒரு காலத்தில் நக்கலாக கேட்கப்பட்ட நாட்டின் எதியோப்பியன் ஏர்லைன்ஸ் இன்று ஆபிரிக்காவின் முதல் தர விமானசேவையாகும். அதுமட்டுமல்லாது உலக விமானசேவை தரப்படுத்தலில் பல ஐரோப்பிய நாடுகளை பின் தள்ளி முதல் 25 விமான சேவைகளுள் ஒன்றாக இந்த ஆண்டு (2018) இடம்பிடித்திருக்கிறது. (Sri Lankan 80 ஆவது இடம்).

இளம் வயது பிரதமர் அஹமட் அலி தலைமையிலான அரசாங்கம், இளம் சமூகத்தின் வளர்ச்சியில் எங்கெல்லாம் முதலிட முடியுமோ அங்கெல்லாம் முதலீடுகளை செய்வதில் முனைப்பாய் செயற்படுகிறார்.

தலைநகர் அடிஸ் அபாபாவில் பல்கலைக்கழக அபிவிருத்திக்கு முதலீடு செய்யுமாறு துபாய் மன்னரிடம் சொன்ன போது, இங்கே வந்து கற்றுக்கொள்ளுங்கள என்று பதில் வந்த போது you have lost in Islam என்று துபாய் மன்னரின் முகத்தில் சொல்லி சர்ச்சையான மனிதர் சாட்சாத் இதே அஹமட் அலிதான்.\

ஆபிரிக்காவின் கொம்பு என்ற செல்லப்பெயரால் அழைக்கப்படும் எதியோப்பியாவின் வளர்ச்சியை பார்க்கையில், ஒரு காலத்தில் இலங்கையை விட மிக மோசமான நிலையில் எதியோப்பா இருந்ததாம் என்று எங்கள் பிள்ளைகள் எதியோப்பா விசாவுக்கு முண்டியடிக்கும் ஒரு காலத்தில் பேசிக்கொள்ளக்கூடும்.

-DILSHAN MOHAMED-

Post a Comment

0 Comments