Subscribe Us

புத்தளத்தில் அரிய வகை வண்ணத்துப்பூச்சி (படங்கள்)


புத்தளத்தில் அரிய வகை வண்ணத்துப்பூச்சி இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையை தொடர்ந்து புத்தளம், விலுக பிரதேசத்தில் அரிய வகை வண்ணத்துப்பூச்சி இனங்காணப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் வீடு ஒன்றிற்கு வந்த வண்ணத்துப்பூச்சியே இவ்வாறு கமராவில்
பதிவாகியுள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இரவு நேரத்தில் வீட்டில் இருந்த மின்விளக்கிற்கு அருகில் வந்திருந்த நிலையில் அவதானிக்கப்பட்டுள்ளது.

இந்த வண்ணத்துப்பூச்சி 5.5 அங்குலம் அளவை கொண்ட பெரிய இனத்தைச் சேர்ந்தவை என தெரிவிக்கப்படுகின்றது.

வித்தியாசமான மஞ்சள் நிறத்தை இந்த வண்ணத்துப்பூச்சி கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.



Post a Comment

0 Comments