Subscribe Us

header ads

இந்த நோய்களால் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்களா? இனிமேல் குவைட்டில் வீசா கிடையாது.


குவைத்தில் 22 வகையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இனி வேலைவாய்ப்பு விசா கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் அரசின் புதிய சட்டப்படி 22 வகையான நோய்களால் தாக்கப்பட்டுள்ளவர்களுக்கு இனி ரெசிடென்ஷியல் விசா (Permanent Residence Status) வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டினர்களின் மருத்துவத்திற்காக அரசு செலவிடும் செலவீனத்தை குறைப்பதற்காகவே இந்த முடிவு குவைத் சுகாதார அமைச்சகத்தால் எடுக்கப்பட்டுள்ளதாக Al Watan அரபி பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியை மேற்கோள்காட்டி stepfeed.com  இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

கேன்சர், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், தொற்றும் தன்மையில்லாத பல வகை நோய்கள் இவற்றுடன் சிறுநீரக செயலிழப்பு, பார்வை குறைபாடுகள் மற்றும் பல என பட்டியல் நீள்கிறது. குவைத்திற்கு வேலையின் நிமித்தம் வருபவர்கள் 100 சதவிகிதம் வேலை பார்க்கும் தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sources: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்

Post a Comment

0 Comments