Subscribe Us

header ads

யாழில் முஸ்லிம் தமிழ் இளைஞர்கள் மோதலை பொலிஸாரின் உதவியுடன் தடுத்த யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம் நிலாம்

பாறுக் ஷிஹான்

யாழ்ப்பாணம் பொம்மைவெளிப் பகுதியில் பள்ளிவாசல் முன்பு முச்சக்கர வண்டி நிறுத்துவதற்கு ஆட்சேனையை தெரிவித்ததையடுத்து முஸ்லிம்  தமிழ் இளைஞர்கள் சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில்  பொலிஸாரின் உதவியுடன் யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம் நிலாம்  சமரசத்துக்கு கொண்டு வந்துள்ளார்.

யாழ்ப்பாணம் பொம்மைவெளியிலுள்ள பள்ளிவாசலுக்கு முன்பாக தமிழ் இளைஞர் ஒருவரால் வியாபார நிலையம் ஒன்று நடத்தப்படுகிறது. அந்தக் கடையைச் சேர்ந்தவர்கள் தமது முச்சக்கர வண்டியை பள்ளிவாசல் முன்பாக நிறுத்தி வந்துள்ளனர்.

பள்ளிவாசல் முன்பாக முச்சக்கர வண்டியை நிறுத்துவதால் தமக்கு இடையூறாக இருப்பதாக முஸ்லிம்கள் சிலர் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். அதனால் அந்தக் கடையைச் சேர்ந்தோருக்கும் முஸ்லிம்கள் சிலருக்கும் இடையே  வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

அதுதொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பொலிஸார் இரு தரப்புக்கும் இடையே இணக்கத்தை ஏற்படுத்தினர்.

இதற்காகக யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம் நிலாம் தனது முழுப்பங்களிப்பினையும் வழங்கியமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

Post a Comment

0 Comments