Subscribe Us

header ads

இனவாதிகளே! பள்ளிவாயல்கள் தகர்க்கப்பட்டால் படைத்தவனுக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லாமல் போய்விடும் என்று நினைத்தாயோ?

இனவாதிகளே!


எங்கள் இரத்தங்கள் கொதிக்கும் என்று நினைத்து நீங்கள் எங்கள் பள்ளிவாயல்களினை உடைப்பதற்கு திட்டமிட்டு இருந்தால் வேறுவிசயம்

ஆனால் பள்ளிவாயல்கள் தகர்க்கப்பட்டால் எங்களுக்கும் எங்களைப் படைத்தவனுக்குமுள்ள தொடர்பு குறைந்து போகும். படைத்தவனை மறந்து தொழுகையை மறந்து விடுவோம் என்று எக்காரணம் கொண்டும் நினைக்காதீர்கள்.

அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுச் சொல்கிறோம்.

நினைவில் வையுங்கள். நீங்கள் எங்கள் வணக்கஸ்தலங்களை உடைக்க உடைக்க அல்லாஹ் மீதான நெருங்குதல் மேலும் அதிகரிக்குமே ஒழிய ஒரு போதும் குறையவே குறையாது.


பள்ளிவாயல்களை உடைத்தாலும் எங்களுக்கும் அல்லாஹ்வுக்குமுள்ள தொடர்பை உங்களால் ஒரு போதும் உடைக்க முடியாது.

பொருளாதாரத்தை வீழ்த்தப்பாக்கிறீர்கள். ஆனால் ஆன்மீக ரீதியில் எழுந்து கொண்டிருக்கிறோம்.

பத்துக்கு மேற்பட்ட பள்ளிவாயல்களை எரித்திருக்கிறீர்கள். 

உங்களின் திட்டங்களை தவிடு பொடியாக்கவும் உங்களில் இருந்து எங்களை பாதுகாக்கக்கோரியும் கண்ணீர் விட்டு அழுது அவனிடத்தில் எங்கள் ஆற்றாமையை சொல்லி மனம் உறுதியடைய மறுபடி இன்னொரு பள்ளிவாயலுக்குத்தான் சென்று பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறோம்..


இக்கட்டான சூழ்நிலையில் நம்பிக்கையிழந்து போகமாட்டோம். எங்கள் ஈமான் உறுதியடையும் வரை பள்ளிவாயல்களை நெருங்கிக்கொண்டே இருப்போம்.

இப்போதுமல்ல. எப்போதும் சொல்கிறோம்.

எங்களை இறைவன் சோதிக்கிறான். எங்கள் ஆன்மீக பலத்தை அதிகரிக்க அவன் சோதிக்கிறான். 

ஆயுத பலம், அரசியல் பலம், ஆள் பலம் ஆகியற்றைவிட ஆன்மீக பலத்தால் பலமுறை வென்றிருக்கிறோம்.

-Abdur Rahman-

Post a Comment

0 Comments