Subscribe Us

கல்பிட்டி வைத்தியசாலை அபிவிருத்தியின் அவசியம். (PHOTOS)



பல வருடகாலமாக பலரால் பேசப்பட்டு வந்த பேசப்பட்டு வரும், கல்பிட்டி வைத்திய சாலை அபிவிருத்தி சம்பந்தமாக ஆக்கபூர்வமான நடவடிக்கையை முன்னெடுத்துச் சென்று வைத்தியசாலையை தரமுயர்ததுவதற்கான ஏற்பாடுகளை மஸ்ஜுதுல் அக்ஸா பள்ளி நிர்வாகம் ஊடாக ஜூம்ஆ பள்ளிகளின்,நிர்வாகிகள் ,அதேபோல தக்கியா பள்ளிகளின் நிர்வாகிகள்,சங்கங்களின் நிர்வாகிகள் போன்றோரை அண்மையில் சந்தித்து கலந்துரையாடப்பட்டது, அதேபோல கிறிஸ்துவ மத,இந்து மத,பெளத்த மத, மத போதகர்கள் நிர்வாகிகளை அண்மையில் சந்திக்க உள்ளதோடு ,கல்பிட்டி இளைஞர் கழக உறுப்பினர்களையும் சந்திந்து கலந்துரையாடி இவர்கள் அனைவர்களின் இருந்தும் ஒரு திறமையான நிர்வாகம் குழு ஒன்றை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுவருகிறது குறிப்பிடத்தக்கது.


ஜாதி,மத,மொழி பேதமில்லாத இவர்களுடைய முயற்சி வெற்றி பெற அனைவரும் பிரார்திப்பதோடு ,ஊர் மக்களின் ஒத்துழைப்பும் அவசியம் தேவைப்படும்,உ ங்களின் உதவி அவசியம் தேவைப்படும் நேரத்தில் நிர்வாகம் உங்களை நாடி வரும் போது உதவியும் ஒத்துழைப்பும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிரார்கள்.

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.

-Rizvi Hussain-




















Post a Comment

0 Comments