Subscribe Us

header ads

ஐ.எஸ். அமைப்பின் பிடியில் இருந்து ஈராக் விடுபட்டது: ஈராக் பிரதமர் அபெடி அறிவிப்பு

ஈராக்கில் ஐ.எஸ். ஜிகாதி அமைப்பு பொதுமக்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டு வந்தது.  அவர்களை நாட்டில் இருந்து வெளியேற்றும் முயற்சியில் ஈராக் ராணுவம் ஈடுபட்டது.
இந்த நிலையில் பாக்தாத் நகரில் இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பிரதமர் அபெடி, ஈராக் மற்றும் சிரிய எல்லையை எங்களது படைகள் முழு கட்டுக்குள் கொண்டு வந்துள்ளன.  அதனால் ஐ.எஸ். அமைப்பினருக்கு எதிரான போர் முடிவுக்கு வந்துள்ளது என நான் அறிவிக்கிறேன்.
எங்களது வளர்ச்சியை அழிக்க எங்கள் எதிரி விரும்பினர்.  ஆனால் ஒற்றுமை மற்றும் தீர்மானத்துடன் செயல்பட்டு நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்.  குறைந்த காலத்தில் நாங்கள் வென்றுள்ளோம் என அவர் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments