Subscribe Us

header ads

கல்விப் பொதுத்­த­ரா­தர சாதா­ரண தரப்­ப­ரீட்­சைக்­கான அனு­ம­திப்­பத்­திரம் இது­வரை கிடைக்­காத மாண­வர்கள் உடனே இந்த இலக்கத்திற்கு அழையுங்கள்


கல்விப் பொதுத்­த­ரா­தர சாதா­ரண தரப்­ப­ரீட்­சைக்­கான அனு­ம­திப்­பத்­திரம் இது­வரை கிடைக்­காத மாண­வர்கள் மற்றும் அனு­மதி பத்­தி­ரத்தில் ஏதா­வது  பிரச்­சி­னைகள் இருப்­ப­வர்கள் தாம­த­மின்றி அறி­விக்­கு­மாறு பரீட்­சைகள் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது. அவ்­வாறு பிரச்­சி­னைகள் இருப்­ப­வர்கள் அது தொடர்பில் 1911 என்ற தொலை­பேசி இலக்­கத்­திற்கு தொடர்பு கொண்டு அறி­விக்க முடியும் எனவும் தெரி­வித்­துள்­ளது.
அத்­துடன் பாட­சாலை பரீட்­சார்த்­தி­க­ளுக்­கான அனு­ம­திப்­பத்­தி­ரங்கள் பாட­சாலை அதி­பர்­க­ளுக்கும், தனியார் பரீட்­சார்த்­தி­க­ளுக்­கான அனு­ம­திப்­பத்­தி­ரங்கள் பரீட்­சார்த்­தி­களின் தனிப்­பட்ட முக­வ­ரிக்கும்   அனுப்­பப்­பட்­டுள்­ள­தாக பரீட்­சைகள் ஆணை­யாளர் நாயகம் பி. சனத் பூஜித தெரி­வித்­துள்ளார்.
இம்­முறை கல்விப் பொதுத்­த­ரா­தர சாதா­ரண தரப்­ப­ரீட்­சையில் 4 இலட்­சத்து 29ஆயி­ரத்து 493 பாட­சாலை பரீட்­சார்த்­தி­களும், 2 இலட்­சத்து 59ஆயி­ரத்து 80 தனியார் பரீட்­சார்த்­தி­க­ளு­மாக  மொத்தம் 6 இலட்­சத்து 88 ஆயி­ரத்து 573 பேர்  தோற்­ற­வுள்­ளனர். கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments