Subscribe Us

header ads

பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்

பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சருக்கு மேலதிகமாக வறிய மற்றும் அதிக வறிய சுமார் 03 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர் வழங்கப்பட உள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
சீருடை மற்றும் பாதணிகளுக்காக 45 இலட்சம் வவுச்சர்கள் அச்சிடப்படுவதுடன், தற்போதிருக்கின்ற நிலமைக்கு அமைய பாடசாலை விடுமுறைக்கு முன்னதாக மாணவர்களின் கைகளுக்கு கிடைப்பதில் பிரச்சினை இருப்பதாக கல்வியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 15ம் திகதியாகும் போது அனைத்து வவுச்சர்களையும் அச்சிட்டு தருவதாக அரச அச்சக திணைக்களத்தினால் கூறப்பட்டிருந்த போதிலும், அது 20ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. .
இந்நிலையில், குறித்த வவுச்சர்கள் இதுவரை கிடைக்கவில்லை என்றும், அடுத்த வாரத்திற்குள் கிடைக்காவிட்டால் விடுமுறைக்கு முன்னர் மாணவர்களுக்கு வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என்று கல்வியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Azeem

Post a Comment

0 Comments