Subscribe Us

புத்தளம் மதுரங்குளி விபத்தில் சாரதிக்கு புத்தளம் நீதவான் அளித்த தீர்ப்பு என்ன தெரியுமா???


யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற பஸ் விபத்துக்குள்ளான சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பஸ் சாரதியை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த சாரதியை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்று, மதுரங்குளி பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றை முந்திச்செல்ல முற்பட்ட போது, குறித்த பஸ் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகில் இருந்த பாலத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பஸ்ஸில் பயணித்த 7 பேர் உயிரிழந்ததுடன், 43 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Post a Comment

0 Comments