மகன் கெப் வண்டியை ஒட்ட பயிற்சி ஈடுபட்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மகன் வாகனத்தை ஓட்டிக்கொண்டிருந்த போது அவரது தயார் வாகனத்திற்கு முன்னால் வந்துள்ளார்.
அப்போது பிரேக் பிடிப்பதற்கு பதிலாக எக்ஸர்லேட்டரை அழுத்தியுள்ளார். இதன் காரணமாக தாய் கெப் வண்டியில் மோதுண்டு படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த தாய் முச்சக்கர வண்டி உதவியுடன் கவரனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் 56 வயதான கே.எம்.ரஞ்சனி என்ற பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். கெப் வண்டியை ஓட்டிய 34 வயதான மகனுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 Comments