Subscribe Us

header ads

பைஸர் முஸ்தபாவின் தான்தோன்றித் தனமான செயற்பாடே தேர்தல் பிற்போடப்படக் காரணமாகும்..


தேர்தலை எதிர்கொள்ள அஞ்சும் இவ்வரசு தேர்தலை பிற்போட உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவை பயன்படுத்தியதா என்ற அச்சம் எழுவதாகபாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ  தெரிவித்தார்.

ஊடகளுக்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு அமைச்சருக்கு என்ன அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதோ அதைத் தான் ஒருஅமைச்சரால் செய்ய முடியும்அதனை மீறி எதனையும் செய்ய முடியாதுஅவ்வாறு மீறிஎதனையாவது செய்கின்ற போது அதனை நீதிமன்றத்தால் கேள்விக்குட்படுத்த முடியும்.

உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம்உறுப்பினர்கள் எண்ணிக்கை போன்றவைதொடர்பான விடயங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை தயாரிக்க அசோக பீரிஸ்தலைமையிலான ஒரு குழு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருந்ததுஅந்த குழுவின்அறிக்கையில் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கு எல்லைநிர்ணய விடயத்தில் மாத்திரமே தலையீடு செய்து மாற்றம் கொண்டு வர முடியும்மாறாகஒரு சபையின் உறுப்பினர் எண்ணிக்கைஒற்றை உறுப்பினர் வட்டாரத்தை இரட்டைவட்டாரமாக்கல்,இரட்டை உறுப்பினர் வட்டாரத்தை ஒற்றை உறுப்பினர் வட்டாரமாக்கல்போன்றவற்றை செய்யும் அதிகாரமில்லை.

அசோக பீரிஸ் தலைமையிலான குழு வெளியிட்ட அறிக்கையில்அமைச்சர் பைஸர்முஸ்தபா தலைமையிலான ஒரு குழு அமைக்கப்பட்டுஅவருக்குள்ள அதிகாரத்தை மீறியவிடயங்கள் உட்புகுத்தப்பட்டுள்ளனஇதன் காரணமாகத் தான் இன்று உள்ளூராட்சிமன்றங்களின் தேர்தலை நடாத்துவதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளதுஒரு அமைச்சரின்தான்தோற்றித் தனமான செயற்பாட்டால் மக்களின் ஜனநாயக உரிமைகள்மறுக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாதுஅமைச்சர் பைஸல் முஸ்தபாதன்னால்சிறந்த முறையில் தனக்கு வழங்கப்பட்ட அமைச்சை கையாள முடியாது என்ற தனதுஇயலாமையை உணர்ந்து தனது அமைச்சை இராஜினாமா செய்ய வேண்டும்.

அமைச்சர் பைஸர் முஸ்தபா ஒரு சட்டத்தரணிஅவர் ஜனாதிபதி ஆலோசகராகவும்பணியாற்றியவர்அவருக்கு இந்த சிறிய சட்ட விடயம் தெரியாமல் இருந்திருக்கவாய்ப்பில்லைதேர்தலை பிற்போட என்னவெல்லாம் செய்ய முடியுமோஅத்தனையையும் செய்யும் இவ்வரசுஅமைச்சர் பைஸல் முஸ்தபாவை பயன்படுத்திதேர்தலை பிற்போடஇவ்விடயத்தை செய்துள்ளதா என்ற சந்தேகம் எழுகிறதுஇதுதான்அவர்களுக்குள்ள இறுதி சந்தர்ப்பமுமாகும்இவ்வரசின் இச் செயற்பாட்டின் ஊடாகஅமைச்சர் பைஸல் முஸ்தபாவின் சட்டத்துறை அறிவு கூடகேள்விக்குட்படுத்தப்படுகிறது.

Post a Comment

0 Comments