எகிப்தில் கணவரின் 2வது திருமணத்தை நேரில் வந்து வாழ்த்திய முதல் மனைவி.
மொதாஸ் ஹிலால் (Motaz Hilal) என்ற எகிப்தியர் முதல் மனைவியுடன் பந்தம் தொடரும் நிலையில் 2வது திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து அதற்கான வேலைகளில் ஈடுபட திருமண நாளும் வந்தது.
மணமேடையில் புதிய மனைவியுடன் அமர்ந்திருந்தவருக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், அவருடைய முதல் மனைவி கணவரின் 2வது திருமணத்திற்கு நேரில் வந்திருந்ததுடன் மணமகளையும் தனது கணவரையும் அருகில் அமர்ந்து வாயாற வாழ்த்தினார்.(அது மனமாற வாழ்த்தா என்பதற்கு இப்போதைக்கு ஆதாரம் கிடைக்காது)
இந்த பேரதிசய சம்பவம் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி முதலிடத்தை பிடித்தது கணவருக்கு மிகுந்த ஆச்சரியம் ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளார். இன்று போல் என்றும் கூடி வாழ வாழ்த்துவோம்.
தனது 2வது திருமணத்திற்கு சம்மதித்த முதல் மனைவியை போல் என் வாழ்வில் சிறந்தவர் வேறு யாரும் இருக்க முடியாது என எகிப்தின் 'டீரீம் டிவி'யில் பேட்டியளித்துள்ளார், அதாவது பிரச்சனையை ஏணிவைத்து இறக்கி தன்னோடு அழைத்துச் சென்றுள்ளார், தில்லான மனுசன் தான்.
இதுபோல நம்முடைய நலனில் அக்கறை கொள்கிற முதல் மனைவி ஒருவர் நமக்கும் வாய்த்தால் எப்படி இருக்கும் என கற்பனை வானில் பறப்பதற்கும், உங்கள் காதுகளிலிருந்து புகை வருவதற்கு நாங்கள் பொருப்பல்ல.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
0 Comments