Subscribe Us

header ads

சவுதியில் 16 வயதில் மணமுடித்த மாப்பிள்ளைக்கு ஆண் குழந்தை பிறந்தது



சவுதியில் 16 வயதில் திருமணம் முடித்த மாப்பிள்ளைக்கு ஆண் குழந்தை பிறந்தது.

சவுதி அரேபியா, தபூக் நகரைச் சேர்ந்த 16 வயது இளம் மாப்பிள்ளை அலி அல் கைஸிக்கு  (Ali Al-Qaisi) கடந்த வருடம் 15 வயதுடைய உறவுக்கார மணமகளுடன் திருமணம் நடைபெற்றது. தற்போது இந்த தம்பதிக்கு அழகியதோர் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இடைநிலைப் பள்ளியின் 2 ஆம் ஆண்டு மாணவரான அலி அல் கைஸிக்கு  (Qaisi was in his second year in the intermediate school when he got married) நடைபெற்ற இத்திருமணத்தை தொடர்ந்து பல்வேறு ஆதரவு மற்றும் எதிர்ப்புக் குரல்களும் எழுந்தன.

தன்னுடைய குடும்பத்தின் கடமைகளை நிறைவேற்றத் தெரிந்தவருக்கு இளம் வயதில் திருமணம் செய்து வைப்பது தவறில்லை என்றும், இது தவறான முறையில் சுகம் பெற முயல்வதிலிருந்து தடுக்கும் என்பது ஆதரவாளர்களின் நிலை.

மிக இளம் வயது தம்பதியினர் போதிய பக்குவம் இல்லாதவர்கள். குடும்பத்தை கவனிக்கவும், குழந்தைகளை வளர்த்தெடுக்கவும், திருமணத்திற்கு பிந்தைய வாழ்க்கையை சந்திப்பதற்கு மிகவும் சிரமத்தை எதிர் கொள்வார்கள் என்பது எதிர்ப்பாளர்களின் கருத்து.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான் 

Post a Comment

0 Comments