Subscribe Us

header ads

DUBAI ல் சலுகை விலையில் விமான டிக்கெட் !


அமீரகத்தின் 3 முக்கிய சர்வதேச விமான நிலையங்கள் துபை, ஷார்ஜா மற்றும் அபுதாபியில் அமைந்துள்ளன. இங்கிருந்து பல்வேறு சர்வதேச தடங்களுக்கு சேவையாற்றும் பல்வேறு விமான நிறுவனங்களும் அவ்வப்போது பல்வேறு அதிரடி சலுகைகளை அறிவிப்பது வழக்கம்.

தற்போது,

ஷார்ஜாவிலிருந்து செயல்படும் ஏர் அரேபியா விமான நிறுவனம் நேற்று (அக். 8) முதல் அக்டோபர் 12 ஆம் தேதி வரை குறைந்தபட்ச டிக்கெட் விலையாக திர்ஹம் 399 முதல் பல சலுகைகளை வழங்கியுள்ளது. இந்தியாவின் கேரள மாநிலத்திற்கு திர்ஹம் 599 முதல் பறக்கலாம். இந்த சலுகை டிக்கெட்டுகளை எதிர்வரும் 2018 மார்ச் 31க்குள் பயன்படுத்திவிட வேண்டும்.

செபு பசிபிக் விமான நிறுவனம் பிலிப்பைன்சிற்கு திர்ஹம் 196க்கு அதிரடி சிறப்பு சலுகை டிக்கெட்டுகளை வழங்கி வருகிறது. இந்த ஆஃபர் டிக்கெட் விற்பனை நாளையுடன் (அக். 9) முடிவடைகிறது.

ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் துபை மற்றும் அபுதாபியிலிருந்து இந்தியாவின் லக்னோ, பூனே, மங்களுர் பறக்கும் பயணிகளுக்கு திர்ஹம் 768 முதல் சலுகை கட்டண டிக்கெட்டுகளை வழங்கி வருகிறது. இந்த மாதம் (அக்டோபர் 31) வரை இந்த சலுகை கட்டண டிக்கெட்டுக்களை வாங்குபவர்கள், டிக்கெட் வாங்கிய தினத்திலிருந்து 30 நாட்களுக்குள் பயன்படுத்திட வேண்டும்.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

Post a Comment

0 Comments