Subscribe Us

header ads

சிறையில் அடைப்பதால் எம்மை அடக்கிவிடலாமென நினைக்க வேண்டாம் – பா.உ நாமல் ராஜபக்ஸ


சிறையில் அடைப்பதன் மூலம் எமது செயற்பாடுகளை தடைசெய்யலாமென இவ்வாட்சியாளர்கள் கருதுவது பகற் கனவாகவேஅமையுமென ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ஸ தெரிவித்தார்.

நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்மேலும் தெரிவிக்கையில்...

நான் சிறை சென்று வந்துள்ளேன்.நான் செய்த குற்றம் நட்டின்சொத்துக்களை விற்பனை செய்வதை எதிர்த்து நாட்டுக்காகபோராடியதுஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மாத்தளைவிமான நிலையம் ஆகியவற்றை வெளிநாடுகளுக்கு விற்பனைசெய்வதை தடுப்பதே எமது ஆர்ப்பாட்டத்தின் நோக்கமாகவிருந்தது.நாட்டுக்காக சிறை சென்று வருவதை பெருமையாககருதுகிறேன்.என்னோடு கைது செய்யப்பட்டவர்களில் மருந்து எடுக்கவந்தவர்களும் உள்ளடங்குவர்இது தான் நல்லாட்சியின் செயற்பாடு.

நாட்டை விற்பனை செய்யும் கொள்கையில் இருந்து நல்லாட்சிவிலகும் வரை எமது போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.என்னோடு அமைதி பேரணியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளஅனைவரும் விடுவிக்கப்பட வேண்டும்அவர்கள் சிறையில் இருந்துவிடுவிக்கப்படும் வரை எமது போராட்டம் மிக கடுமையாக அமையும்.இப்படியான சிறையில் தள்ளும் செயற்பாடுகளை செய்வதன் மூலம்எம்மை அடக்கிவிடலாம் என இவ்வாட்சியாளர்கள் கருதுவார்களாகஇருந்தால் அது பகற் கனவாவே அமையும்.

Post a Comment

0 Comments