Subscribe Us

header ads

டான் பிரசாதை அடக்க முடியாத அரசு, எப்படி இனவாதத்தையா அடக்கப் போகிறது?

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத சிந்தனைகளை விதைக்கவும் செயற்பாடுகளை முன்னெடுக்கவும் ஒருகுழு எப்போதும் முயன்று கொண்டே இருக்கின்றது.அந்த குழுக்களை அடக்க ஆடித் திரியும் சிலரது வால்கள் ஒட்டநறுக்கப்படல் வேண்டும்.அதில் ஒருவர் தான்இந்த டான் பிரசாத் என்பவராகும்மிக நீண்டகாலமாக முஸ்லிம்களுக்குஎதிரான பல செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறார். 

அந்த வகையில் ரோகிங்கிய மக்கள் தொடர்பில் முக நூலில் பதிவிட்டுள்ள அவர் “தாங்கள் ஒன்றிணைந்து அவர்களைகொன்று விடுவோம் “ என கூறியுள்ளார். 

ரோஹிங்கிய அகதிகள் தொடர்பிலான செயற்பாடுகளை முன்னெடுப்பது இவ்வாட்சியாளர்களின் கடமையாகும்இலங்கைஅரசானது சர்வதேச ரீதியிலான பல கொள்கைகளை கவனத்தில் கொண்டு முடிவுகளை எடுக்க வேண்டும்அப்படிஇருக்கையில் “ அவர்களை கொல்வோம் “ என எச்சரிப்பது தீவிர வாதத்துடன் தொடர்புடைய வார்த்தை பிரயோகங்களாகும்இலங்கை அரசு எப்படியான முடிவை எடுத்தாலும் அது வேறு விடயம்இப்படியான வார்த்தை பிரயோகங்களை பாவிக்கஎத்தனை துணிவு வேண்டும்?

இவர் நீதி மன்றத்தால் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட ஒருவர்விஜயதாஸ ராஜபக்ஸவை அமைச்சிலிருந்து நீக்கியதால்ஞானசார தேரர் பயந்து ஜப்பான் சென்றுவிட்டதாக கூறினார்கள்சாதாரண டான் பிரசாத்தை அடக்க முடியாத அரசுஞானசார தேரரையா அடக்கப் போகிறதுஇதற்கிடையில் இவர் இனவாதத்தை தூண்டும் வகையிலான கருத்துக்களைவெளியிடக் கூடாதென நீதி மன்றத்தால் எச்சரிக்கப்பட்டவர்.அண்மையில் முஸ்லிம் பெண் சிங்கள பெண்களுக்குகருத்தடை மாத்திரைகளை வழங்குகிறார் போன்ற போலிக் குற்றச் சாட்டுக்களை கூட முன் வைத்திருந்தார்.

இவ்வரசு டான் பிரசாத் விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்நீதியை நிலை நாட்ட வந்த நீதி அமைச்சராவது நீதியைநிலை நாட்டுவாரா?  எத்தனை முறை எப்படி கேட்டாலும்இவ்வரசு டான் பிரசாத் போன்றவர்களின் விடயத்தில் நீதியைநிலை நாட்டப் போவதில்லை.

Post a Comment

0 Comments