Subscribe Us

header ads

குறுகிய காலத்துக்குல் சாதித்து வரும் கல்பிட்டி A.M Nafras தலைமையிலான WCC கிரிக்கட் அணி.



கல்பிட்டியின் சிறந்த வீரர்களை கொண்டு சுமார் ஒரு மாதக்காலதுக்குள் ஆரம்பிக்கப்பட்ட தாம் பங்குபற்றிய நான்கு சுற்றுப்போட்டிகளில் இரண்டு Champion வெற்றிக்கிண்ணம் ,இரண்டு Runner Up வெற்றிக்கிண்ணங்களை கைப்பற்றி ஊருக்கு பெருமைச்சேர்த்து வரும் A.M.Nafras தலமையிலான கல்பிட்டி WCC அணியினரை மேலும் பல வெற்றிகளை பெறுவதற்கு ஊக்கப்படுத்தி பாராட்டுவது மென்மேலும் எமது ஊருக்காக சிறப்பாக விளையாடுவதற்கு அவர்களுக்கு உந்து சக்தியாக அமையும்.

இவர்கள் பெற்ற இக்குறுகிகால வெற்றியானது .ஊருக்குள்ளேயே பெற்றது மட்டும் அல்ல .மன்னாரில் பங்குபற்றிய சுற்றுப்போட்டியில் Champion( முதலாம் இடம்),முஸல்பிட்டியில் நடைபெற்ற சுற்றுப்போட்டியில் Champion,அதே போல் நுரைச்சோலையில் பங்குபற்றிய சுற்றுப்போட்டியில் Runner Up (இரண்டாம் இடம்),அன்மையில் கல்பிட்டியில் நடைபெற்ற ஹஜ்ஜூப்பெருநாள் கிரிக்கட் சுற்றுப்போட்டியில் சிறப்பாக விளையாடி தேசிய மட்ட அணிகளில் ஒன்றான கொழும்பு அணியுடன் இறுதிப் போட்டியில் மோதி இரண்டாம் இடம் (Runner up) பெற்றுக்கொண்டனர்.

அண்மைக்காலமாக சிறப்பாக திறமைகளை காட்டி வரும் எமது ஊர் அணியான கல்பிட்டி WCC மேலும் பல வெற்றிப்பெற்று ஊருக்கு பெருமை தேடித்தர மனமார வாழ்த்துவதோடு இனிவரும் காலங்களில் எனது ஊடக அனுசரனையையும் வழங்கவுள்ளேன்.

-Rizvi Hussain




Post a Comment

0 Comments