Subscribe Us

header ads

யாழில் பிரபல உணவகத்தில் புழு கறி (PHOTOS)

யாழ்ப்பாணம்  கே.கே.எஸ் வீதியில் உள்ள பிரபல சைவ  உணவகத்தில் இளைஞர் ஒருவர் உட்கொண்ட உணவில் இருந்து புழு ஒன்று காணப்பட்டதனால் அங்கு சிறிது சலசலப்பு ஏற்பட்டது.

நேற்றைய  தினம் (27) குறித்த உணவகத்தில் மதியம் உணவருந்த ஆயத்தமான வேளை குறித்த உணவில் புழு இருந்ததை அடுத்து கோபமடைந்த வாடிக்கையாளரான இளைஞர் உரிமையாளரை அழைத்துள்ளார்.

எனினும் புழு உள்ளதை  சுட்டிக் காட்டிய இளைஞர்   மீது கடும் தாக்குதல் மேற்கொண்ட உணவக  உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் சம்பவத்தை வேறு திசையில் மாற்ற முற்பட்டனர்.

மேலும் குறித்த சாப்பாட்டுக் கடையில் அடிக்கடி இவ்வாறு சுகாதார சீர்கேடுகள் நடைபெறுவதாக அந்தப் பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


இது குறித்து யாழ் சுகாதார பணிப்பாளரோ அவரது பணியாளர்களோ எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுப்பதில்லையெனவும் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.





Post a Comment

0 Comments