கனடாவின் அல்பெர்ட்டா நகரில் இரவு உணவுக்காக தங்களது 105 வருட பரம்பரை குடும்பத் தோட்டத்தில் விளைந்த கேரட்டுகளை ஆய்ந்து கொண்டிருந்தார் மருமகள் ஒருவர் ஆனால் அவர் கையில் சிக்கிய கேரட்டோ சற்று வித்தியாசமாக தெரிந்தது. கேரட்டுகளை சமைப்பதற்காக சுத்தப்படுத்திய போது அந்த வித்தியாச கேரட் வைர மோதிரம் அணிந்திருப்பதை அறிந்து ஆச்சரியமுற்றார்.
மேரி கிராம்ஸ் எனும் 84 வயதுடைய பெண்மணி சுமார் 13 வருடங்களுக்கு முன் தங்களுடைய மேற்படி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது தன்னுடைய கணவர் அணிவித்த திருமண மோதிரத்தை தொலைத்து விட்டார், எவ்வளவோ முயன்றும் மோதிரம் கிடைக்கவில்லை.
அந்த தொலைந்து போன மோதிரத்தைத் தான் தற்போது கேரட் ரூபத்தில் மருமகள் உதவியுடன் கண்டெடுத்து பூரித்துப் போயுள்ளார். இதற்கிடையில் இந்த வைர மோதிரம் காணாமல் போன விஷயமே தெரியாமல் கடந்த 5 வருடங்களுக்கு முன் மேரி கிராம்ஸின் கணவர் இறந்து போய்விட்டது தனி சோகக்கதை.
1. மாமியார் மருமகள் ஒற்றுமை
2. விற்கப்படாத 105 வருட பாரம்பரியத் தோட்டம்
3. தங்களுடைய உணவுத் தேவைக்கு தங்களுடைய தோட்டத்து காய்கறிகள்
4. தங்களுடைய தோட்டத்தில் அவர்களே உழைப்பது
என்பன போன்ற இந்த வைர கேரட் கதையில் இன்றைய உலகிற்கு தேவையாக பல நல்ல விஷயங்கள் உள்ளன.
Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்


0 Comments