ஒரு பொம்மலாட்டம் நடக்குது-ரொம்பப்
புதுமையாக இருக்குது
நாலு பேரு நடுவிலே
நூலு சிலரின் கையிலே
அல்லும் பகலும் அமைச்சர் 'உழைத்தார்' தன் கட்சிக்காக-அந்த
கட்சி இப்போ காலை வாரியது
தன் ஆட்சிக்காக.
வேலை விட்டு விலகி வந்தார்
விசாரணைக்காக-ஆனால்
மாலை போட்டு கூப்பிடப்படுவார்
மறுபடி உள்ளே
கடிக்கத் தெரியா பிள்ளை போலே
இத்தனை காலம் -அந்த
கதர் மனிதர் ஆண்டது எல்லாம் தண்ணீர் கோலம்.
தேர்தல் என்னும் மந்திரத்தால் அதிபர் ஆனாரே - ஆனால்
ஆனை செய்யும் தந்திரத்தால்
புதிராய்ப் போனாரே
அணிலை விரட்டி ஆட்சி பிடிக்க
அலையும் சால்வை -அந்த
சால்வைக் கூட்டை உடைக்கப் பாயும்
அணிலின் சூழ்ச்சி
ஆக மொத்தம் எல்லாம் இங்கு
அரசியல் வித்தை - இதில்
பாவம் இடையில் பகடைக்காயாய்
பாமரக் கூட்டம்.
0 Comments