Subscribe Us

header ads

கற்பிட்டி அ.இ.ம.கா அமைப்பாளர் ஏ.ஆர்.எம் முஸம்மில் அமைச்சர் ரிசாத்துடன் சந்திப்பு


இந்த கலந்துறையாடல் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்ரசின் பிரதித் தலைவருமான அல் ஹாஜ் M.H.M.நவவி அவர்களின் தலைமையில் இலங்கை கைத்தொழில் அதிகார சபையின் புத்தளம் பிராந்தியத்திற்கான கைத்தொழில் ஊக்குவிப்பு அதிகாரி ஜனாப் இப்லால் அமீன் அவர்களின் இல்லத்தில் இடம் பெற்றது.

இந்த நிகழ்வில் கல்பிட்டி பிரதேச ACMC பிரதான அமைப்பாளரான ஜனாப் A.R.M.முஸம்மில் அவர்கள் கல்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற இருக்கின்ற அபிவிருத்திகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுத்தறுமாறும் ஏற்கனவே அபிவிருத்திகளுக்காக ஒதுக்கப்படிருக்கின்ற வேலைத்திட்டங்களை துரிதப்படுத்துமாறும் அமைச்சர் றிஷாட் பதியுதீனிடம் கேட்டுக் கொண்டார்.

அதற்கினங்க அமைச்சர் அவர்கள் கல்பிட்டிப் பிரதேசத்தில் வழங்கப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் கட்டாயம் இடம் பெறும் என்பதாகவும் கல்பிட்டி பிரதேசத்திற்கு தனது சேவை தொடர்ச்சியாக இடம்பெறும் என்றும் குறிப்பிட்டார்.



ஒப்பீட்டளவில் புத்தளம் மாவட்டத்தில் பாரிய அபிவிருத்தி திட்டங்களில் அகில இலங்கை மக்கள் காங்ரசினூடாக இடம்பெருகின்ற அபிவிருத்தித்திட்டங்களில் கல்பிட்டி பிரதேசத்திற்கே கூடுதலான ஒதுக்கீடுகள் இடம் பெற்றுள்ளதாகவும் அவைகளை நடைமுறைப்படுத்துவதில் சில காலதாமதமே தவிர வேறு எந்த பிரச்சினைகளும் கிடையாது என அமைச்சர் குறிப்பிட்டதுடன் குறிப்பாக கல்பிட்டி பிரதேசத்தில்

1.கல்பிட்டி மாவட்ட வைத்திய சாலைக்கான ரூபாய் 150 மில்லியன் ஒதுக்கீடுகள்.

2.கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்துக்கான 6 கோடி ரூபாய் ஒதுக்கீடு

3.கல்பிட்டி அல் அக்ஸா தெசிய பாடசாலைக்கு அதிபர் மற்றும் ஆசிரியர் விடுதிகளுக்கான ஒதுக்கீடுகள்

4.திரந்து வைக்கப்பட்ட கல்பிட்டி கப்பலடி கிராமம் மற்றும் கல்பிட்டி நகரத்துக்குமான சிறு ஆடைத் தொழிற்சாலைக்கான ஒதுக்கீடுகள்.

5.கல்பிட்டி நகரத்திற்கு இரண்டு காப்பட் பாதைகளுக்கான ஒதுக்கீடுகள்.

6. செய்து முடிக்கப்பட்ட மண்டலக்குடா தார் பாதைக்கான ஒதுக்கீடுகள்.

7.கல்பிட்டி கண்டல் குடா கிராமத்துக்கான கரப்பந்தாட்ட விளையாட்டு மைதானத்திற்கு 1.5மில்லியன் ஒதுக்கீடுகள்

8. கல்பிட்டி பிரதேசத்தில் காணப்படுகின்ற தெரிவு செய்யப்பட்ட பாலர் பாடசாலைகளுக்கான ரூபாய் 05 மில்லியன் ஒதுக்கீடு

9. கல்பிட்டி பிரதேசத்தின் கரம்பை கிராமத்தின் விளையாட்டரங்கத்திற்கு(Stadiam) ரூபாய் 5இலட்சம் ஒதுக்கீடு.

10.கல்பிட்டி நுரைச்சோலை கிராமத்தின் கல் பாலி தார் பாதைக்காக ரூபாய் 2 மில்லியன் ஒதுக்கீடு

11.அமைப்பாளர் A.R.M.முஸம்மில் அவர்களின் முயற்சியால் அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஊடாக வழங்கப்பட்ட 09அரச நியமனங்கள்.

12. பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் M.H.M.நவவி அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் கல்பிட்டிப் பிரதேசத்தின் சகல கிராமங்களுக்குமான பல நிதி ஒதுக்கீடுகள் ..



போன்ற அபிவிருத்தி திட்டங்கள் கல்பிட்டி பிரதேசத்தில் தற்போது இடம் பெற்றும் எதிர்காலத்தில் இடம் பெற இருக்கின்ற திட்டங்களையும் அமைச்சர் முன் வைத்ததுடன் இவைகளை முன்னெடுத்துச்செல்ல அமைப்பாளர் முஸம்மில் நிறைய முயற்சி செய்திருப்பதாகவும் இப்டியான அமைப்பாளர்கள் எமது கட்சியோடு இணைந்து மக்களுக்கு சிறந்த சேவையைக் கொடுப்பது வரவேற்கத்தக்கது என அமைச்சர் கூரியது மாத்திரமின்றி கல்பிட்டி பிரதேசத்தில் யார் வந்து எதை சொன்னாலும் எமது கட்சியின் கல்பிட்டி பிரதேசத்திற்கான சிறந்த அமைப்பபாளர் அது முஸம்மிலாகத்தான் இருக்க முடியுமெனவும் அமைச்சர் அவர்களினால் முஸம்மில் அவர்களுக்கு கல்பிட்டி பிரதேசத்தின் கிங் (Kalpitiya aria king) என்ற வார்த்தையும் பிரயோகிக்கப்பட்டு அவரை வரவேற்று உற்சாகப் படுத்தப்பட்டது.

இந்த திகழ்வில் பாராளுமன்ற உறுபினர் அல் ஹாஜ் M.H.M.நவவி,முன்னால் புத்தளம் நகர சபை உறுப்பினர் ஜனாப் முஹுசீன்,இப்லால் அமீன்,இன்பாஸ்,கல்பிட்டி ACMC அங்கத்தவர்கள்,முபாஸ்,இபாம்,யசார் போன்றோர்களுடன் இன்னும் பலர் கலந்துகொண்டனர்.



Post a Comment

0 Comments