குறித்த பெண் தன் கணவன் தன்னை விட்டு பிரிந்து போன நிலையில் லுனுவிலயிலுள்ள தன் கணவர் வீட்டிலேயே வாழ்ந்து வந்துள்ளார். அவ் வீட்டில் கணவரின் தந்தையும் வசித்து வந்துள்ளார்.
கணவனில்லாது தனியே வாழ்ந்து வரும் மருமகளை பலாத்காரமாக கட்டித்தழுவ முயற்சித்தபோது அதை தடுத்த மருமகளை கூர்மையான கத்தியால் குத்தியுள்ளார்.
வெட்டுக்காயத்துக்குள்ளான பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணைகளை நடாத்தி வருவதோடு விசாரணைகளுக்கு பின்னர் நீதி மன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.


0 Comments