Subscribe Us

header ads

ஞானசார தேரரை மிஞ்சும் சுமனரத்ன தேரர்..


மீராவோடை பாடசாலை காணி விவகாரத்தில் தமிழ் - முஸ்லிம் மக்களிடையே முரண்பாடு நிலவி வருகிறதுஇந்நமுரண்பாட்டை தனக்கு மிகவும் சாதகமாக பயன்படுத்திய மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டியேசுமனரத்ன தேரர் முஸ்லிம்களுக்கு எதிராக மிகவும் கண்டிக்கத்தக்க வார்த்தை பிரயோகத்தை கையாண்டிருந்தார்இப்படியான கீழ்த்தரமான வார்த்தை பிரயோகத்தை ஞானசார தேரர் கூட பாவித்திருக்கவில்லை எனக் கூறினாலும்தவறாகாது.

குறித்த தேரர் ஞானசார தேரரின் நெருங்கிய சகாவாகும் என்பது யாவருக்கும் தெரியும்ஞானசார தேரர்அடக்கப்பட்டிருந்தாலும் அவரின் மூலம் நிகழ்த்தப்பட்ட இன வாத நிகழ்ச்சி நிரல்கள் டான் பிரசாத் மற்றும் இவ்வாறானதேரர்களால் முன்னெடுக்கப்படுகிறதுஇதனை இவ்வரசு கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்க்கின்றது.

இது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைஇதில் இவர் மூக்கை நுழைக்க வேண்டியஅவசியமில்லைஅல்லது இவருக்கு அனைத்து பிரச்சினைகளின் போதும் தலையிட்டு தீர்வை பெற்றுக்கொடுக்கும்அதிகாரம் வழங்கப்பட்டிருக்க வேண்டும்இவ்வரசு மறைமுகமாக இவ் அதிகாரத்தை வழங்கியிருந்தாலும்ஆச்சரியப்படுவதற்கில்லைஇந் நாட்டின் அதிகாரம் பௌத்த அடிப்படைவாதிகளின் கைகளில் படிப்படியாக சென்றுகொண்டிருப்பதை இதனூடாக அறிந்துகொள்ளலாம்.

குறித்த தேரர் பிரச்சினை எழுந்த இடத்தில் நீதி மன்ற உத்தரவை கிழித்து வீசியிருந்தார்இதற்கு முன்பும் ஒரு தடவைஅவர் நீதி மன்ற உத்தரவை கிழித்து வீசியிருந்தார்பௌத்த தேரர்களுக்கு நீதி மன்ற உத்தரவை கிழித்தெறியும்வகையிலான சட்டங்கள் ஏதேனும் உள்ளதா என்ற அச்சம் எழுகிறதுஇவரின் செயற்பாடானது இலங்கை நீதிதுறையின்செயற்பாட்டை பலவீனப்படுத்துகிறதுஇதுவெல்லாம் இலங்கை நாட்டுக்கு சிறந்ததல்ல.

 அஹமட்-

Post a Comment

0 Comments