Subscribe Us

header ads

புத்தளம் மாவட்ட மக்களின் கவனத்திற்கு...!


உங்களது கடைகளையும், காணிகளையும், தோட்டங்களையும், வீடுகளையும் பறிபோகாமல் பாதுகாத்துக்கொள்ள சில அறிவுரைகள்.

இன்று நமது ஊரிலே ஒரு சில கும்பல்கள், நமது ஊரவர்களின் காணிகளை வலுக்கட்டாயமாக அவர்கள் சொந்தமாக்கிக்கொள்ள முயட்சி செய்கிறார்கள்.

ஆகவே உங்களது காணிகளை பாதுகாத்துக்கொள்ள சில வழிமுறைகள் :


1. நகர சபை வரிகளை கட்டி, பற்று சீட்டினை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்.

2. உங்களது சொத்தின் நகர சபை வரியை வேறு நபர்கள் செலுத்துகிறார்களா என அவதானமாய் இருங்கள்.

3. உங்களின் வாப்பாவின் / உம்மம்மாவின் பெயரிலோ அல்லது அப்பாவின் பெயரிலோ காணி சீட்டு இருந்தால் உங்களின் பெயருக்கு மாற்றிக்கொள்ளுங்கள் .

4. தண்ணீர் மற்றும் மின்சார இணைப்பினை பெற்று , அந்த பற்று சீட்டையும் , மாதாந்த Bill களையும் வைத்துக்கொள்ளுங்கள்.

5. மிக முக்கியமான விடையம், சுற்றி வர கம்பி கட்டை அல்லது மதில் அமைத்து விடுங்கள்.

6. Suvey Plan (வரை படம்) எடுத்து நகர சபை மூலம் உறுதி படுத்தி கொள்ளவும்

7. Ownership Certificate (உரிமையாளர் சான்றிதழ் ) எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

8. Street Line Certificate (பாதை வரும் வழி சான்றிதழ் ) எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

9. இது உங்கள் காணி என உங்களின் GS சான்றிதலும் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

10.மேலதிக ஆலோசனைகளுக்கு சட்டத்தரணியை நாடவும்.


மேலும் இந்த குழுவோடு தொடர்புள்ளவர்கள், முன்னைய காலங்களிலே சேவையாற்றிய நகர சபை உறுப்பினர்கள் , சமாதான நீதவான்கள் , கிராம சேவகர்கள் போன்றவர்களை அணுகி சட்டத்திட்கு புறம்பான முறையில் சில ஆவங்களை தயாரிக்கின்றனர்.


தனி நபரோ அல்லது அரசாங்க உத்தியோகத்தரோ போலியான ஆவணங்கள் தயார்செய்வதோ அல்லது அதட்கு உதவி செய்வதோ தண்டனைக்குரிய குற்றமாகும்.


இந்த மோசடி குழுக்கள் உங்களது காணிகளையோ அல்லது உங்களின் உறவினர்களின் காணிகளையோ அபகரித்திருந்தால். அந்த ஆவணங்களை பின்வரும் சட்ட அமைப்பின் ஈமெயில் முகவரிக்கு அனுப்பவும். உங்களது விபரங்கள் மிக இரகசியமாக பேணப்படும். (lankalawyersforum@gmail.com)


தகவல்.
இல்ஹாம் மரைக்கார் 

Post a Comment

0 Comments