Subscribe Us

header ads

கற்பிட்டியில் நான்கு நாட்களில் 19 நபர்களுக்கு எதிராக வழக்கு! ஏன் தெரியுமா???


தற்போது கல்பிட்டி பிரதேசத்தில் மிக வேகமாக டெங்கு நோய் பரவிவருவதால் டெங்கு நோய் தடுப்பு வேலைத்திட்டம் ஒன்றை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலத்தினால் கடந்த 14/08/2017 ம் திகதியிலிருந்து நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

இவ்வேலைத்திட்டத்தின் மூலம் நான்கு நாட்களில் மட்டும் டெங்கு நோய் குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்ட மற்றும் டெங்கு நுளம்புகள் பரவ ஏதுவாக சூழலை வைத்திருந்த 19 நபர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இன்னும் பல்வேறு அறிவுருத்தல்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.


மேலும் ஜனசவி புரம்(ஆனவாசல்) ,மணல் தோட்டம்,முஹம்மதியாபுரம் பகுதிகளில் வேகமாக டெங்கு நோய் பரவிவருவதால் மக்கள் அவதானமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்படியும் சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்கும்படியும் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய அதிகாரிகள் வேண்டுகின்றனர் .

மேலும் எதிர்வரும் சனிக்கிழமை (19/082017) அன்று மேலும் ஒரு வேலைத்திட்டம் ஒன்று இருப்பதனால் அதில் கலந்து கொள்ளவிரும்புவோர் காலை 8 மணியளவில் கல்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலத்திற்கு வருகை தந்து கல்பிட்டியிலிருந்து டெங்கு ஒழிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றார்கள்.

-Rizvi Hussain-







Post a Comment

0 Comments