Subscribe Us

header ads

கல்பிட்டி பெறியகுடியிருப்பு தையல் மையம் திறப்பு விழா நிகழ்வு (படங்கள் இணைப்பு)

கல்பிட்டி பிரதேசத்தில் அமைக்கப்பெற்றுள்ள சிறு ஆடைக் கைத்தொழிற்சாலை மூன்றும் இன்று அகில இலங்கை மக்கள் காங்ரசின் தேசிய தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான அல் ஹாஜ் றிஷாட் பதியுதீன் அவர்களின்  வழி காட்டலில் அகில இலங்கை மக்கள் காங்ரசின்   கல்பிட்டி பிரதேச பிரதான அமைப்பாளர் ஜனாப் A.R.M.முஸம்மில் தலைமையில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்ரசின் பிரதித் தலைவருமான அல் ஹாஜ் M.H.M.நவவி அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதில்

1.கல்பிட்டி மண்டலக்குடா பகுதி.
2.கல்பிட்டி பெரிய குடியிருப்பு பகுதி.
3.கல்பிட்டி கப்பலடி கிராமம்
                       போன்ற பகுதிகளிலே இந்த நிலையங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இந்த ஆடைத் தொழிற்சாலையினை ஆரம்பித்து வைப்பதற்காக  அகில இலங்கை மக்கள் காங்ரசின் புத்தளம் மாவட்ட பிரதான அமைப்பாளர் அல் ஹாஜ் அலி சப்ரி  ரஹீம் சிறப்பு அதிதியாகவும் அகில இலங்கை மக்கள் காங்ரசின் உயர் மட்ட குழு உறுப்பினரும் முன்னால் மாகாண சபை உறுப்பினருமான  அல் ஹாஜ் ஆப்தீன் எஹியா மற்றும் கல்பிட்டி பிரதேச செயலாளர் திரு ஹேரத் ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் கலந்துகொண்டனர்.

இந்த நிலையங்களின் தொடர்ச்சியான இயக்கம் இன்றிலிருந்து ஆரம்பமாகியுள்ளன.

இந்த மூன்று நிலையங்களிலும் 60 யுவதிகள்  பயிட்சியாளர்களாக காணப்படுவதுடன் தொடர்ந்து ஆறு மாத பயிட்சியின் பின்னர் இந்த நிலையங்கள் ஒரு வர்த்தக நிலையமாக மாற்றம் பெற்று பயிட்சி பெற்ற யுவதிகள் தொழில்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டு அவர்களின் வாழ்வாதார முன்னேற்றங்களை அடைவதற்கான திட்டமாகவே இத்திட்டம் காணப்படுகின்றன.இதன் காரணமாக இந்த நிலையங்கள் இப்பிரதேசத்தில் சிறந்த சிறிய ஆடைத்தொழிற்சாலையாக இயங்கும். இந்த சிறந்த திட்டங்களை அகில இலங்கை மக்கள் காங்ரசின் தேசிய தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் அல் ஹாஜ் றிஷாட் பதியுதீன் அவர்கள் வடிவமைத்து நாட்டில் நிலவுகின்ற இளைஞர் யுவதிகளின் வேலை இல்லாப் பற்றாக்குறையில் இத்திட்டம் மக்களின் பொருளாதாரத்தில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற வகையில் உருவாக்கப்பட்ட திட்டமேயாகும்.
-Rizvi Hussain- (KV REPOTER)













Post a Comment

0 Comments