கடந்த 14/08/2017 அன்றிலிருந்து 19/08/2017 தொடர்சியாக இன்று வரை மிகவும் கண்டிப்போடும் ஆர்வத்தோடும் பாரபட்சமில்லாமல் டெங்கு நோய் தீவிரமாக பரவியுள்ள கிராமங்களின் வீடுகளுக்கும் பொது நிறுவனங்களும் மேற்கொண்டு பரிசோதனை நடத்தியதோடு பலருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடும் பலருடன் அன்பாக பேசி பல ஆலோசனைகளையும் வழங்கியதுடன் இந்த நான்கு நாட்களில் சுற்று சூழலை மோசமான நிலையில் டெங்கு நுளம்பு பர ஏதுவாக வைத்திருந்த 27 நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகயும் எடுத்துள்ளார்கள்.
இவ்வாரான இவர்களுடைய தீவிர பரிசோதனையால் கல்பிட்டியிலுள்ள பல வீடுகளும் சுற்று சூழளையும் சுத்தமாக வைத்திருப்பதை இன்று என்னால் காணமுடிந்தது இவ்வாரான செயல்பாடுகளாலும் தொடர்ச்சியான பரிசோதனைகளாலும் டெங்கு நோய் பரவும் வேகத்தை கட்டுபடுத்தமுடியும். அதே போல் இப்பகுதிகளில் திடீர் சோதனைகளையும் மேற்கெள்ளப்படும் எனவும் தெரிவித்தனர்.
இது இவர்களுடைய கடமையாக இருந்தாலும் அர்ப்பணிப்புடனும் டெங்கு நோயை கல்பிட்டியிலிருந் துரத்தியடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மனித நேயத்துடன் சேவை செய்யும் இவர்களை பாராட்டியே ஆகவே வேண்டும்.
-Rizvi Hussain-





0 Comments