Subscribe Us

கற்பிட்டி ஐயூப் அரசினர் மகாவித்தியாலயத்தில் டெங்கு கிணறு கண்டுபிடிப்பு (படங்கள் இணைப்பு)


இன்றும் கல்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய அதிகாரிகளால் விஷேடமாக டெங்கு நோய் தடுப்பு வேலைத்திட்டம் ஒரு பச்சிளம் பாலகனின் உயிரை பலியெடுத்தத முகம்மதியாபுரத்திற்கு அயல் கிராமமான அல் மனார் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது .

இதில் பல வீடுகள் தீவிரமாக பரிசோதிக்கப்பட்டதோடு பலருக்கு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டது.



இங்கு காணப்படும் அரசாங்க பாடசாலையான ஐயூப் அரசினர் மகாவித்தியாலயமும் அதிகாரிகளால் பரிசோதிக்கப்பட்டது ஏனென்றால் இங்கு கல்வி கற்கும் ஆறு மாணவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதே முக்கிய காரணமாகும் இங்கு காணப்படும் கிணறு ஒன்றை பரிசோதித்த போது மிகவும் மோசமான நிலையில் அக்கிணறு காணப்பட்டதோடு அக்கிணற்றில் நுளம்பு குடம்பிகளும் அதிகமாக உற்பத்தியடைந்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது .



உடனடியாக பாடசாலை அதிபருக்கு அறிவித்ததோடு உடனடியாக கிணற்றை சுத்தப்படுத்துவதற்கு ஏற்பாடுகளும் மேற்கோள்ளப்பட்டது.

-Rizvi Hussain














Post a Comment

0 Comments