Subscribe Us

header ads

இலங்கையில் தற்போது அதிகமாய் பேசப்படும் (ஃபேஸ்புக் டாப் 5)


இலங்கையின் கிழக்கு மாகாண மக்கள் உச்சபட்ச சந்தோஷத்தில் திளைத்து இருக்கும் இந்நாட்களில் 'நீ பேசாத வார்த்தைகளுக்கு நீயே எஜமானன்' என்ற வழமைக்கு மாறான ஒளவைப்பாட்டி ரக தத்துவத்துடன் உங்களை எல்லாம் சந்திப்பதில் மகிழ்ச்சி! இந்த வாரம் நமது டைம்லைனை உலுக்கி எடுத்த பதிவுகள் என்ன என்ன ரேட்டிங் இல் இருக்கிறது என்று பார்க்கலாமா ?வாங்க! நிகழ்ச்சிக்குப் போகலாம்...

பின்நூரி ராஜா எம்.பீ பீ எஸ் : ஓட்டை

இந்த வாரம் ஐந்தாம் இடத்தில் இருக்கிறது பின்நூரி ராஜா எம் பீ.பீ.எஸ். ஏ.எல் பரீட்சை எழுதிய மாணவர்களை ஜமாத்தில் அழைத்துப் போகும் நோக்கியா 1100 காலம் எல்லாம் தலை தெறிக்க ஓடிப் போய்க் கொண்டு இருக்க மாணவ சமூகம் தூங்கும் நேரம் தவிர மற்றைய பொழுதுகளில் வீணாய் காலத்தைக் கழிப்பதைக் கண்டு ஆபரேஷன் ஹறாம் பத்வா புகழ் பின் நூரி கவலையடைந்தார். இந்தக் குறையைக் கலைய சமூகத்தில் அனைத்து மாணவர்களையும் வெறும் தம்மா துண்டு ஒருவருடத்தில் அங்கு பங்சர் மருத்துவராக்கப் போவதாய் விளம்பரம் செய்ய வாட்ஸ் அப்பே வாய் பிளந்து அலறியது.விடுவார்களா ? போராளிகள்.. நூரியை ஓட்டு ஓட்டு என்று ஓட்டினர்..

அய்யூப் என்னும் சிறுவன் : வயசுக்கு எப்போ வருவார் ?


"அய்யூப் அஸ்மின் என்னும் சிறுவன்" இந்த வாரம் பெற்றிருக்கும் இடம் நான்கு.காலத்தால் அழியாத காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைகளை எல்லாம் ஊர் பேர் தெரியாத மொட்டைக் கடிதம் போல யாரோ ஆயுததாரிகள் செய்தார்கள் என்று மொத்த அழிவுகளையும் காத்தான்குடி வீதிகளில் கெத்து காட்டும் பேரீச்சம் பழ மர கிளைகளால் மறைக்கப் பார்த்தார் அஸ்மின்.சமகால சாட்சியாய் நேரில் அனுபவித்த ஃபேஸ்புக் பிரபலங்கள் எல்லாம் அஸ்மினைத் தூர் வாரி காதில் அலகு குத்தி அழகு பார்த்துவிட்டார்கள்.NFGG கட்சியும் ' பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று'என்று பாட்டுப் பாடி ஆளைக் கைகழுவி விரட்டி விட்டது.

இலங்கை தேசத்திலும் கிரிக்கட் இருந்தது : மெகா சொதப்பல்


மூன்றாம் இடத்தில் ' இலங்கை தேசத்திலும் கிரிக்கட் இருந்தது'.இந்தியாவுடன் அடிவாங்கிக் கொண்டு இருக்கும் இலங்கை அணி சரியாய் 20 வருடங்களுக்கு முன்பு 1997 ஆகஸ்ட் 6 இல் தான் சனத்தின் 340 இன் துணையுடன் சாதனைமிகு 952 ரன்களைக் குவித்தது.ஆனால் இப்போது எல்லாமே தலைகீழ்.பசுமை மிகு கிராமம் பாலைவனமாகிப் போன மாதிரி ஒரு அவலம்.சம்பள நாளில் மட்டும் வீட்டைக் கொஞ்சம் கவனித்துவிட்டு மற்றைய நாட்களில் பொறுப்பற்று மட்டையாகிக் கிடக்கும் குடிகாரக் கணவன் போல வெறுப்பு ஏற்றுகிறது இலங்கை.

வீஸா இல்லாமல் நல்ல முயற்சி


டுபாயில் இருந்து சரவணன் பெற்றுள்ள இடம் இரண்டு.ஏதோ ஆர்வக் கோளாறில் அமைச்சர் ஹக்கீம் கல்முனையை டுபாய் போலவும் சம்மாந்துறையை பஹ்ரெய்ன் போலவும் மாற்றுவேன் என்றார்.அவ்வளவுதான்.கிழிந்தது லுங்கி.அரசியலில் இப்படி ஒரு நகைச்சுவையைக் கேட்டே இல்லாதவர்கள் போல போராளிகள் குஷியாகி மீம்ஸ், ஸ்டேடஸ் என்று அலறவைக்கின்றனர்.அவர்கள் காட்டில் தங்க மழை..டுபாயில் இருந்து சரவணன் : 


ஓவியா ஆர்மி : ஓ போடு!


ராணுவ புரட்சியோ, வன்முறையோ துளியும் இன்றி உலகத்தில் தமிழ் பேசப்படும் பகுதிகளில் எல்லாம் ஆட்சியைப் பிடித்து டாப் இல் இருக்கிறது ஓவியா ஆர்மி.ஆளை ஆள் புறம் பேசித் திரியும் பிக் பாஸ் வீட்டில் இதில் எதுவும் ஒட்டாமல் தனித்துவமாய் இருந்து கோடிகளில் லைக்ஸ் அள்ளிய ஓவியா வாழ்விலும் காதல் வந்து குறுக்கிட ஓபியம் போதைப் பொருள் சாப்பிட்ட தாலிபான்காரி போலானார்.ஆரவ் உடன் காதல் தோல்வி ஒரு புறம் இருக்க பைத்தியங்கள் வாழும் கூடாரத்தில் இத்தனை நாள் தாக்குப் பிடித்ததே சாதனை என்கிறார்கள் நிபுணர்கள்.தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் இருக்கப் பிடிக்காமல் ஓவியா நேற்று வெளியேற ' இனி பிக் பாஸே வேண்டாம் ' என்று எகிறுகிறது ஆர்மி.



இந்த ரேட்டிங் அடுத்த வாரம் மாறலாம்.சுவாரசியமான புது விடயங்கள் பேசு பொருளாகலாம்.இன்னொரு டாப் 5 நிகழ்ச்சியில் சந்திக்கும் வரை விடை பெற்றுக் கொள்கிறேன்...

Zafar Ahamed

Post a Comment

0 Comments