Subscribe Us

கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏமனில் 10 லட்சம் குழந்தைகள் பட்டினி மற்றும் நோயால் இறக்கும் ஆபத்து'

கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏமனில் உள்ள குழந்தைகளின் நோய் எதிர்ப்பு அமைப்பு பலவீனமடைந்திருப்பதாவும், இதனால் அங்கு வாழும் ஒரு மில்லியனுக்கும் மேலான குழந்தைகளுக்குக் காலரா நோய் வந்தால் அவர்கள் இறப்பதற்கான வாய்ப்பு மூன்று மடங்கு அதிகமாக இருப்பதாவும், சர்வதேச தன்னார்வ தொண்டர் அமைப்பான `சேவ் த சில்ரன்`` அமைப்பு கூறியுள்ளது.
ஐந்து வயதுக்கும் குறைவான இரண்டு லட்சம் ஏமன் குழந்தைகள் பட்டினியால் இறக்கும் ஆபத்து இருப்பதாகவும்``சேவ் த சில்ரன்`` தெரிவித்துள்ளது.
இரண்டு வருடமாக நடந்த உள்நாட்டுப் போரின் காரணமாக ஏமன் பஞ்சத்தின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டிருப்பதுடன், நாட்டின் சுகாதார அமைப்பு முற்றிலும் முடங்கியுள்ளது.
"பட்டினி மற்றும் நோய்`` என்ற சுழற்சியில் ஏமன் குழந்தைகள் சிக்கியிருப்பதாக இந்த அமைப்பு கூறுகிறது.

Post a Comment

0 Comments