Subscribe Us

header ads

கத்தார் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு தடையை நீக்கியது ஐக்கிய அரபுஅமீரகம்



அரபு நாடுகளுக்கிடையிலான பிணக்கின் பின்னணியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் தடை செய்யப்பட்டிருந்த  beiN Spots  கத்தாரிலிருந்து ஒளிபரப்பாகும் 



பெயின் ஸ்போர்ட்ஸ் ( beiN Spots ) தொலைக் காட்சி சேவைக்கு நேற்று முதல் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.



பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் கத்தார் மாற்றங்களைக் கொண்டு வருவதையும் வரவேற்றுள்ள அமீரகம், கத்தார் தமது கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற நிலையில் குறித்த தொலைக்காட்சி சேவைக்கு மீண்டும் அனுமதி வழங்கியுள்ளது.



இந்நிலையில், அரபு நாடுகளுக்கிடையிலான பிணக்குகள் நீடிப்பதால் எந்தத்தரப்புக்கும் நன்மையில்லையென துருக்கி அதிபர் அரத்துக்கான் தெரிவித்துள்ளதுடன் சமரச முயற்சியில் நேரடியாக ஈடுபடப்போவதாகவும் தெரிவித்துள்ளமையும் அல்ஜசீரா உட்பட ஏனைய கத்தார் ஊடகங்களுக்குத் தொடர்நதும் தடை நீடிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

-Kuwait Tamil Pasanga-

Post a Comment

0 Comments